குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு கிரீன் சிக்னல்.. எடுத்த காரியம் சக்சஸ்.. கோடீஸ்வர யோகம் கொட்டும்
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குருப்பெயர்ச்சி எப்போது
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குரு ஸ்தலம்
குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.
பார்வை பலம்
மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் சிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
குருப்பெயர்ச்சி துலாம் ராசி பலன்
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு தென்குடிதிட்டைக்குச் செல்வது நல்ல பலன்களைத் தரும். கால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் கவனமாக இருப்பது நல்லது. 9 இல் வரும் குரு பகவான் 5 ஆம் பார்வையாக பார்ப்பதால் ஓராண்டுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். இந்த ஒரு ஆண்டில் உங்களுடைய அடித்தளத்தை அமைத்துக் கொள்வது நல்லது. எடுத்த காரியங்கள் வெற்றியைத் தரும்.
தடைகள் விலகும்
சமுதாயத்தில் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உண்டாகும். சுப காரியத் தடைகளில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 பாடல்களைப் படிப்பது நல்லது. ராகு 5 ஆம் இடத்தில் வருவதால் பூர்வ புண்ணிய தோஷத்தை ஏற்படுவதை இது தடுக்கும்.
அடுத்த மூன்று ஆண்டு
2027 ஆம் ஆண்டு வரை 6 ஆம் வீட்டில் சனி பகவான் வலிமையாக அமர்ந்திருப்பதால் எல்லா வகையிலும் அனுகூலம் உண்டாகும். வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி 2028 வரைக்கும் சனி இருக்கிறார். குரு, சனியால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் தான் ராஜா. எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பெரிய பதவி, பொறுப்பு, தடைப்பட்டிருந்த கல்வி, உத்தியோகம், வியாபாரம், தொழில், திருமணம், குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இனி உங்களுக்கு எல்லா விஷயத்திலும் பச்சைக் கொடிதான்.
கோடீஸ்வர யோகம்
3க்கும், 6க்கு அதிபதியாக குரு 9 இல் இருப்பதாலும், உங்கள் ராசியை பார்ப்பதாலும் எல்லா காரியங்களையும் தைரியமாக செய்யலாம். இளம் வயது துலாம் ராசிக்காரர்கள் பெரிய நிலைக்குச் செல்லும் யோகம் உண்டு. கோடீஸ்வரராகும் யோகம் உள்ளது. உங்களுடைய கண்டுபிடிப்புகள், ஆப்கள், சாஃப்ட்வேர் போன்றவை பெரிய வளர்ச்சியைப் பெற்றுத் தரும்.
ஆரோக்கியத்தில் கவனம்
சினிமா, மீடியா, ஸ்போர்ட்ஸ், இசை, அரசு உத்தியோகம், ராணுவத்தில் இருப்பவர்களுக்கு அருமையான வெற்றியைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியலில் நல்ல பதவி, நீதிபதி ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பெற்றோர், பெரியோர் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுடன் சிறு சிறு மோதல் போக்கு உண்டாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பேசித் தீர்த்து கொள்வது நல்லது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications