Guru Vakram: குருவக்கிரப் பெயர்ச்சியில் மேஷ ராசிக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. சூப்பரான நேரம்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுனத்தில் குரு வக்கிரமாக மாறுகிறார். கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து வக்கிரமாகி மிதுனத்துக்கு வருகிறார். வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாக இருக்கும்போது கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும். குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு மூன்றாம் இடம் என்பது உபஜெய ஸ்தானம். 3 ஆம் இடம், புதன் வீட்டில் குரு வக்கிரமாக இருப்பது அந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்காது. திரிகோணத்தில் ராகு இருக்கிறார். வீட்டில் ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. ஜாதகத்தில் ஒரு சில வீட்டில் குரு, ராகு சேர்ந்திருக்கும். அதே சமயத்தில் எப்போது குரு வக்கிரமாகிறாரோ, ராகுவும் இணைவு பெறுகிறாரோ அப்போது வீட்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இடமாற்றம் கன்பார்ம்
இடமாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயமாக இடமாற்றம் உண்டாகும். நிறைய பேருக்கு கழுத்து, தொண்டை தொடர்பான பாதிப்புகள் வரக்கூடியதற்கான வாய்ப்புகள் உள்ளன. அண்ணன், தம்பிக்குள் தேவையில்லாத வரப்பு தகராறுகள் ஏற்படும். அந்த தகராறுகளை அமர்ந்து பேசி தீர்க்கும் காலகட்டமாக இருக்கும்.
வாய்ப்புகள்
மேஷ ராசியினர் நிறைய பேருக்கு நல்ல வாய்ப்புகளும், ஆன்சைட் யோகங்களும் உண்டாகும். சிஸ்டம், ஐடி, கம்யூனிகேஷன், சாப்ட்வேர் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிகளை இழந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குரு வக்கிரமாகும்போது ஆர்டிபீசியல் துறையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தரவுகளால் பாதிப்புகள் வரும் சூழல் உண்டாகும்.
பாதிப்புகள் நீங்கும்
எந்த விஷயங்கள் உங்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்ததோ அவை எல்லாம் சரியாகும். அந்நியோன்யம் உண்டாகும். எதிரிகள் கூட நட்பாக மாறும் காலகட்டமாக இருக்கும். எந்தவிதமான பாதிப்புகள் இருந்தாலும் அவை தீரும். வீடுகளை விற்பதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு அருமையான நேரம் இது.
தைரியம்
ஆடிட்டிங், எழுத்துத் துறை, மீடியா துறை, அறிவுரை சொல்லக்கூடிய துறைகள் எல்லாம் அமோகமாக இருக்கும். தைரியம் உண்டாகும். எல்லா பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். வீட்டின் மேல் தளத்துக்கு குடி போவது, பிளாட் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
வழிபாடு
போன், தகவல்கள், எழுத்துகளால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் காமதேனு வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சந்தோஷம் சார்ந்த விஷயங்களிலும், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களிலும் 85 சதவீதம் அற்புதமான யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications