Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த ராசிக்காரரை எந்த நோய் தாக்கும் - என்ன பரிகாரம் செய்யலாம்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளும் நெருப்பு, நிலம், நீர், காற்று என்று நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 12 ராசிக்காரர்களுக்கும் 12 லக்னகாரர்களுக்கு எந்த மாதிரியான நோய் பாதிப்பு ஏற்படும். நோய்களை சரி செய்வதற்கான பரிக

Subscribe to Oneindia Tamil

சென்னை: 12 ராசிகளையும் நவகிரங்கள் ஆளுகின்றன. நெருப்பு, நிலம், நீர், காற்று என்று நான்கு வகையாக 12 ராசிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. ராசிகளின் தன்மையைப் பொறுத்து இந்த ராசிக்காரர்களுக்கு நோய்கள் பாதிக்கின்றன. 12 ராசிகளுக்கும் வரக்கூடிய பொதுவான நோய்கள் அவரவர் ஜாதகத்தில் உள்ள விதிப்படியே நடக்கும். பொதுவாக ராசிகள் வரக்கூடிய நோய்கள் அனைத்தும் கிரகங்கள். தசா புத்தி கணக்குப்படி தான் வருகிறது. இந்த நோய் வர வேண்டும் என்று விதி இருந்தால் அது விடாது வந்தே தீரும். போவது போயே தீரும். நோய்

நோய்கள் வந்த பின்னர் தவிப்பதை விட நோய் வரும் முன்னரே பாதுகாப்பாக இருக்க வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல்வழி, தொற்று நோய்கள் என எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான நோய் தாக்கும் அதற்கு என்ன மாதிரியான சத்தான உணவுகளைச் சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

மேஷம், சிம்மம்,தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி,மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம் , விருச்சிகம் , மீனம் நீர் ராசிகள், மேற்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்.

மேஷம்

மேஷம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய் காய்ச்சல். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீர் கல் அடைப்பு, ரத்த சோகை, ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை உருவாகும். இவைகள் அனைத்தும் ஏதாவது ஒரு சமயத்தில் வந்து போகும் நோய்கள். அக்னி தேவனை விளக்கேற்றி வணங்கவும், செவ்வாய் பகவானை வணங்க நோய் பாதிப்புகள் குறையும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபத்தின் அதிபதி சுக்ரன். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வரக் கூடிய பொதுவான நோய் ஜலதோஷம். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு, பற்கள் சிதைவு, தோல் நோய், சீதபேதி, காசநோய், விஷக்காய்ச்சல் போன்றவை பாதிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரபகவானை விளக்கேற்றி வணங்கலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுனத்தின் அதிபதி புதன் கிரகம். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வாயு தொல்லை, தலைவலி, வயிற்றுக்கோளாறு, தீராத மலச்சிக்கல், புதிய தொற்று நோய் வரக்கூடும். மிதுனம் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைவதோடு, இதய நோய்கள் வராமலும் தடுக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வணங்கலாம்.

கடகம்

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். நமது உடலில் இதயத்தை அங்கம் வசிக்கும் கடக ராசி, பொதுவாக தண்ணீரால் வரும் நோய்களை உருவாக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரண கோளாறு, காது கோளாறு, தோல் நோய் பாதிக்கும். திங்கட்க்கிழமைகளில் சந்திர பகவானை வணங்கலாம். சிவ ஆலயம் சென்று விளக்கேற்றி வணங்க பாதிப்புகள் நீங்கும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும். நரம்பு தளர்வு, நெஞ்சு வலி, சிறுநீர் பிரச்சினை, கண் காது கோளாறு, பாத வெடிப்பு ஏற்படும். சிம்ம ராசிக்காரர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்தாலே எந்த நோய் பாதிப்பும் ஏற்படாது.

கன்னி

கன்னி

புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய் முடக்கு வாதம். இந்த ராசிக்காரர்களுக்கு சளித்தொல்லை, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய், பிறப்பு உறுப்பை சுற்றி தோல் நோய் பாதிக்கும். பற்கள் பிரச்சினை, செரிமான பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் புதன்பகவானை பாசிப்பயறு படைத்து வணங்கலாம் நோய் பாதிப்புகள் நீங்கும்.

துலாம்

துலாம்

சுக்ரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய பொதுவான நோயாக பால்வினை நோய் உள்ளது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கண் பார்வைக் கோளாறு, மூலநோய், விஷக் காய்ச்சல், வாயுத்தொல்லை ஏற்படும். கட்டுப்பாடான மனநிலையோடு இறைவழிபாடு செய்யலாம். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரக்கூடிய பொதுவான நோய் வாயுத் தொல்லை. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மஞ்சள் காமாலை, நரம்பு தளர்வு, மனக் கோளாறு, தோல் நோய், சளித்தொல்லை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் உடல் நல பாதிப்புகள் நீங்க முருகப்பெருமானை செவ்வாய்கிழமைகளில் வணங்கலாம்.

தனுசு

தனுசு

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட ராசி தனுசு. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களாகும். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ஒவ்வாமை என்னும் அலர்ஜி, மூச்சுக் கோளாறு, செரிமான கோளாறு, புதிய தொற்று நோய்கள், சளித் தொந்தரவுகள் ஏற்படும். நோய் பாதிப்புகள் நீங்க வியாழக்கிழமை குருபகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கலாம்.

மகரம்

மகரம்

மகர ராசியின் அதிபதி, சனி கிரகம் ஆகும். இந்த ராசி மனித உடலில் முழங்கால்களை ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்றே வரக்கூடிய நோய் மஜ்ஜை நோயாகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மன அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாறு, தோல் அரிப்புகள் வந்து போகும். மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் அதிபதியும் சனிபகவான்தான். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகம் வரக்கூடிய நோய் நரம்பு தளர்வு. மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் வரக்கூடும். கும்ப ராசிக்காரர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். சனிபகவானையும் அனுமனையும் சனிக்கிழமைகளில் வணங்க பாதிப்புகள் நீங்கும்.

மீனம்

மீனம்

மீனம் ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்க நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+