Kadagam: கடக ராசிக்கு காத்திருக்கு ப்ரோமோஷன்.. நம்பி ஏமாறுவீங்க.. ரொம்ப கவனம்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தின் ஆரம்பமே நன்றாக உள்ளது. 6, 12 ஆம் இடங்களில் கிரகங்கள் மொத்தமாக கூடியுள்ளன. 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் வருகின்றன. ராஜயோக கிரகமான செவ்வாய் கிரகம் 6, 7 ஆம் இடத்தில் ராசியுடன் தொடர்பு கொள்வது, நட்பு கிரகங்கள் தொடர்பு கொள்வது நல்ல அமைப்பாகும்.
முயற்சிகளில் தடை
8 ஆம் இடத்தில் ராகு இருப்பது முயற்சிகளில் சிறு சிறு தடைகளை ஏற்படுத்தும். மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். சில விஷயங்களில் தடைகளை ஏற்படுத்தும். அப்பா, அம்மா சொல் பேச்சை கேட்க முடியாத, அவர்களைப் பார்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து வந்த பாதிப்புகள், வேலையில் இருந்து வந்த தொய்கள் அனைத்தும் நீங்கும்.
பதவி உயர்வு
பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். டபுள் மடங்கு சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தங்கம், உலோகம், இரும்பு, துத்தநாகம், பித்தளை போன்ற உலோகம் சார்ந்த தொழில்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்து வந்த கஷ்டங்கள், பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அந்நிய, இனம், மதம், மொழி பேசும் நண்பர்கள் மூலமாக விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
நம்பாதீங்க
மற்றவர்களை நம்புவதன் மூலமாக ஏமாற்றப்படும் சூழல் உள்ளது. விரயங்கள் வரும் அமைப்பு உள்ளது. வண்டி வாகனங்களில் செலவு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு சிறு சிறு கவலைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 15 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் 7 ஆம் இடத்திற்கு வந்து உங்களுடைய ராசியை பார்ப்பதால் ஜனவரி மாதத்தின் 3, 4 ஆவது வாரம் எல்லா விஷயங்களையும் சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
மாணவர்கள்
நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு இந்த மாதத்தில் நல்லது நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயங்களையும் சாதிக்கக் கூடிய யோகம் உண்டு. முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் வெற்றிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். வெற்றிகளைக் குவிக்கும் மாதமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications