கன்னி ராசிக்கு இனி கால் வைக்கற இடமெல்லாம் லாபம்.. 30 நாட்களில் சூப்பர் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குரு, சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதன், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

July month rasi palan Kanni

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவான் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் கன்னி ராசிக்குள் வருகிறார்.

அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிநாதன் புதன் பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். இதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சனி பகவான் 13.7.25 தேதி வக்கிரம் அடைய போகிறார். உங்கள் செயல்பாட்டில் சுறுசுறுப்பு ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரியங்களில் துணிச்சலுடன் இறங்கி வெற்றி பெறுவீர்கள்.

பொருளாதாரம்

மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். இரண்டாம் அதிபதியான சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் வலிமையாக அமர்ந்துள்ளார். குரு பகவானும் இரண்டாம் இடத்தை பார்க்கிறார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரம் உயர்வடையும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். இதுவரை இருந்த நிதி நெருக்கடி விலகும்.

வீடு.. நிலம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் நிவர்த்தியாகும். உங்கள் எண்ணத்தில் உயர்வு ஏற்படும். நான்காம் அதிபதி பத்தாம் இடத்தில் இருக்கிறார். இதனால் சுக ஸ்தானம் வலுவடைந்து வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகள் சேர்க்கை ஏற்படும். ஆசைப்பட்ட படியான வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பும் நன்றாக உள்ளது. நீண்ட காலமாக இருந்த சொந்த வீடு கனவு நனவாகும்.

உத்யோகம்

பாக்கிய ஸ்தானம் வலுவடைவதால் உங்களின் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குரு பகவான் ஆறாம் இடத்தை பார்ப்பதால் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு நல்ல உத்யோகம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த நல்ல மாற்றம் நிச்சயம் கிடைக்கும்.

ராஜயோகம்

வெளிநாடு உத்யோக அமைப்பும் சிறப்பாகவே உள்ளது. செவ்வாய் பகவான் 12 ஆம் இடத்தில் மறைந்துள்ளார். எட்டாம் அதிபதி 12 ஆம் இடத்தில் மறைகிறார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். உத்யோகம், தொழிலில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். சூரியன் பத்தாம் இடத்தில் வலிமையாக திக் பலத்துடன் இருக்கிறார். அதிகாரம் உங்களை தேடி வரும்.

அரசுப்பணி

அரசு பணியில் இருப்போருக்கு தடைபட்ட அனைத்து மாற்றங்களும் கிடைக்கும். அரசுப்பணிக்கு முயற்சி செய்வோருக்கும் வெற்றி கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் வெற்றி ஏற்படும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி புரிதல் உருவாகும். காதல் உறவு திருமணமாக நிறைவேறும். சமூகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பு, மரியாதை கிடைக்கும்.

வெற்றி

கேது 12 ஆம் இடத்தில் இருப்பதால் ஆன்மிக நாட்டம் ஏற்படும். தொலை தூர பயணம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ரியல் எஸ்டேட், கலை, துறைகளில் இருப்போருக்கு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். தெளிவாக முடிவு செய்து காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கவனம்.. பரிகாரம்

18.7.25 புதன் பகவான் வக்கிரமாகிறார். எழுத்து, தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ராசியை சனி பகவான் பார்ப்பதால் சற்று சோம்பல் இருக்கும். பிடிவாத குணம் தலை தூக்கும். புதன் கிழமை தோறும் பெருமாள் கோயில் சென்று வழிபடுவது நல்ல வெற்றியை தேடி கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+