எதிர்பாராததை எதிர் பாருங்கள் - துலாம் ராசிக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்
மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குரு, சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதன், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவானும் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்குள் வருகிறார்.
அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலத்துடன் வலிமையாக உள்ளார். இதனால் உங்கள் எண்ணம், செயல்பாடு மேன்மையடையும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். வாய்ப்புகள், லாபம் தேடி வரும். புதன் பகவான் பத்தாம் இடத்தில் இருப்பதால் புத்தி கூர்மையடையும். தெளிவாக சிந்தித்து செயல்படுவதால் தொழிலில் கூடுதல் லாபம் ஏற்படும்.
உத்யோகம், தொழில்
16.7.25 உங்கள் லாபதிபதியான சூரியன் பகவான் தொழில் ஸ்தானத்தில் அமரப் போகிறார். மேலும் அங்கு சூரியன் திக் பலத்துடன் வலிமையாக உள்ளார். எனவே உத்யோகம், தொழிலில் நல்ல லாபம் நிச்சயம் காணப்படும். பாக்கியம் கொடுக்கும் புதன், சூரியன் இணைவது அருமையான பலனை கிடைக்கும். நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தையும் செயல்படுத்த இது சிறப்பான காலம்.
வெற்றி மேல் வெற்றி
தொட்டது துலங்கும் யோகம் ஏற்படும். நீங்கள் ஈடுபாட்டுடன் இறங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பகைவர்கள் விலகுவார்கள். உயரதிகாரிகளினால் நன்மை உண்டு. உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம், பதவி உயர்வு நிச்சயம் ஏற்படும். உத்யோகத்தில் புகழ், பாராட்டு கிடைக்கும்.
பொருளாதாரம் உயர்வு
தொழிலில் உங்களின் முழு திறமை வெளிபட்டு சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில் தடைபட்ட காரியங்கள் விலகி நன்மை ஏற்படும். உங்கள் இரண்டாம் அதிபதியான செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதும் அற்புதமான அமைப்பு. குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியை பார்க்கிறார். சிவ ராஜயோகம் உருவாகி பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
புதிய ஒப்பந்தம்
பண வரவு சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவு செய்வீர்கள். 13.7.25 சனி வக்கிரமடைகிறார். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல உத்யோகம் கிடைக்கும். வெளி மாநிலம், வெளிநாடு பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தைரியம், வீரியம் அதிகரித்து துடிப்புடன் செயல்பட்டு வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கலை, ஊடக துறைகளில் இருப்போரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.
குழந்தைகள் கல்வி
குழந்தை பாக்கியம் இல்லாமல் அதற்கான சிகிச்சையில் இருப்போருக்கு குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் கல்வியில் இடமாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும். வம்பு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நிறைவேறாத விஷயம் திடீரென்று நிறைவேறும். குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல பாக்கியம் கிடைக்கும்.
பரிகாரம்
சனி வக்கிரமடைவதால் நேர் மாறான பலன்கள் கிடைக்கும். எனவே உத்யோகத்தில் நல்ல நிலையில் இருக்கும் சிலருக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் எதிர்மறை எண்ணங்களும் அவ்வப்போது வந்து செல்லும். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் மற்றும் மகாலட்சுமியை வழிபடுவதால் பிரச்னைகள் சரியாகி நல்ல பலன்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications