கன மழை தெரியும்.. பண மழை தெரியுமா.. தனுசு ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்.. கொட்டும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் தனுசு ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

july-rasi-palan-for-dhanusu-you-can-find-out-the-benefits-that-sagittarius-people-will-get-in-this

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்துக்கு சூரியன், ஏழாம் இடத்தில் ராசிநாதன் ஏழாம் இடத்தில் ஏழாம் இடத்து அதிபதி இவற்றில் ஏதாவது ஒரு அமைப்பு இருந்தாலே சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இந்த மூன்று அமைப்புகளும் ஒன்றாக இருப்பது அற்புதமான பலன்களை கொடுக்கும். கோச்சாரத்தில் சூரியன் ஏழாம் இடத்தில் இருப்பது ராஜ வசியத்தை கொடுக்கும்.

ஆளுமை திறன்

சமூகத்தில் உங்களின் பெயர், புகழ், அந்தஸ்து, மரியாதை எல்லாம் உயரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தைரியம், தன்னம்பிக்கை பல மடங்கு கூடும். உங்களின் ஆளுமை பண்பால் எதிலும் ஆட்சி செய்வீர்கள். நிர்வாகத்திறன் சிறப்பாக வெளிப்படும். கடவுளின் ஆசியால் எல்லாவற்றிலும் அணுகூலம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

முன்னேற்றம்

சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். மறுமணம் நடைபெறுவதற்கான காலம். காதல் உறவில் இனிமை கூடும். காதல் திருமணத்தில் நிறைவேறும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆசிரியர்கள், ஐடி, ஊடகம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போருக்கு சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.

வழக்குகள்

ஆறாம் அதிபதி ஆறாம் இடத்திலேயே இருப்பது உங்களின் வலிமையை அதிகரிக்கும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். எதிரிகள் பலம் இழப்பார்கள். நிலம் சார்ந்த பிரச்னைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் விலகும். கடந்த கால கஷ்டங்களில் இருந்து முழுமையாக வெளியேறுவீர்கள்.

வெற்றி

ராகு மூன்றாம் இடத்தில் இருப்பதும் நல்ல அமைப்பு. குருவின் பார்வையில் இருந்து, ராகு தன் வீட்டை தானே பார்க்கிறார். உங்களின் முயற்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக இருக்கும். தெளிவான சிந்தனைகளால் காரியங்களில் சிறப்பாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். கனவுகள் மெய்ப்படும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பொருளாதாரம் உயர்வடையும்.

கவனம்

பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் தான் என்றாலும் பணிச்சுமை, அலைச்சல் ஏற்படும். அம்மாவின் உடல்நலத்தில் அதிக அக்கறை வேண்டும். அம்மாவுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்க்கவும். உங்கள் வீடு அருகில் உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+