"ஒரே கல்லுல ரெண்டு மாங்கா".. கன்னி ராசிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. பண மழையில் நனையப் போறீங்க
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் கன்னி ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் சனியின் பார்வை உள்ளது. சிறு சிறு தடைகள், பாதிப்புகள் வந்து போவதற்கான வாய்ப்புள்ளது. புதிய நண்பர்களிடத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. யாருக்காகவும் ரெக்கமென்ட் செய்வதை தவிர்ப்பது நல்லது. அவர்களாலேயே பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.
பதவி உயர்வு
தேவையில்லாத செலவுகள், அலைச்சல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்களுடைய வேலையை உங்களுடைய தலையில் கட்டுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 2 ஆம் வீட்டுக்கு குரு பார்வை கிடைப்பதால் பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேலை செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, அதன் மூலம் பண வரவு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வருமானத்திற்குப் பிரச்சனை இருக்காது.
லாபம்
4 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் வீடு மாற்றம், இடமாற்றம் போன்ற சிந்தனைகள் உண்டாகும். வீட்டுக்குள் செல்லும்போதே எதோ ஒரு பிரச்சனை என்ற நிலைமை உருவாகும். ஜூலை 15 ஆம் தேதிக்குப் பிறகு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. 12 ஆம் வீட்டு அதிபதி 11 இல் வருவதால் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பழகுகிற நபர்கள், பேசுகிற வார்த்தையில் மட்டும் கவனம் தேவை.
சொத்துகள் வாங்கும் யோகம்
முதலீடுகளை செய்யத் தொடங்குவீர்கள். தேவைகள் அனைத்தும் நிறைவேற்றும், பூர்த்தி செய்யும் காலகட்டமாக இருக்கும். மனம் நிறைவாக இருக்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். இடம் வாங்குவது, வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். புதிய பயிற்சிகளைப் பெறுவீர்கள். நடனம் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரனும் சுக்கிரன் வீட்டில் அமர்ந்திருப்பதால் அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
மனதில் தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பி கேட்பதற்கான சூழல் உள்ளது. வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெயர், புகழ், அந்தஸ்து, திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும், கையிருப்பு பணம் அதிகரிக்கும். சுக்கிரன் சுக்கிரன் வீட்டிலேயே வலுவாக இருப்பதால் அழகுபடுத்திக் கொள்ளும் எண்ணங்கள் தோன்றும். மன உறுதியைப் பெறுவீர்கள்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்கள், வியாபாரத்தில் கவனம் தேவை. கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. நிதானம், பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள், லாபங்கள் கிடைக்கும்.
வழிபாடு
புதன்கிழமை தோறும் நரசிம்மரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். லைட் புளூ கலர் ஆடை அணிவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications