மீன ராசிக்கு பேச்சினால் வரப்போகும் ஆபத்து.. ஆனா சூரியனால் கொட்டும் அதிர்ஷ்டம்.. இதுல மட்டும் கவனம்
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் மீனம் ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீன ராசி பலன்
மீன ராசிக்காரர்களுக்கு 4 ஆம் இடத்தில் மூன்று கிரகங்கள் உள்ளன. ஜென்ம சனி தொடங்கியுள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதானமாகவும், பொறுமையாகவும் இருப்பது நல்லது. உங்களுக்கு சனி பகவான் வாழ்க்கை தொடர்பான அனுபவத்தைக் கொடுக்கப் போகிறார். ராசிநாதன் 4 ஆம் வீட்டில் வலுத்து, 6 ஆம் அதிபதியோடு இணைவாக இருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பேச்சில் கவனம்
6 ஆம் இடத்தில் கேது, 12 ஆம் இடத்தில் ராகு இருக்கிறார். மற்ற கிரகங்கள் நிலை சரியில்லாததால் சிறு சிறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். பேச்சில் மிகுந்த கவனம் தேவை. 2 ஆம் அதிபதி கேதுவுடன் அமர்ந்துள்ளதால் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போவதற்கான வாய்ப்புகளைத் தரும். பொங்குசனி இருப்பதால் வாழ்க்கையில் நிறைய பாக்கியங்களையும் கொடுக்கக் கூடிய அமைப்பு ஏற்படும்.
ஆரோக்கியம்
35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை மாற்றம், தொழில் மாற்றம், தொழில் முன்னேற்றம், நம்பிக்கை, மன தைரியம் உண்டாகும். வீட்டுக்குள் மாறி மாறி முதல் 15 நாள் ஆரோக்கியத்தில் குறைபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. சூரியன் 5 ஆம் வீட்டில் இருப்பது நல்ல காலகட்டமாக இருக்கும். ஜூலை 15 ஆம் தேதிக்குப் பிறகு மருத்துவம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். கண், பல் தொடர்பான பிரச்சனைகள் வந்தால் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
ஜூலை 15க்கு பிறகு
60 வயதைத் தாண்டியவர்கள் மனதை குழப்பிக் கொள்ளாமல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சூரிய பகவானை வழிபடுவது அற்புதத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படும். ஆதித்ய ரிதயம் கேட்பது வளர்ச்சியைக் கொடுக்கும். ஜூலை 15 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். முதல் 15 ஆம் தேதி மனம் தொடர்பான சஞ்சலங்களும், அடுத்த 15 நாட்கள் எடுத்த காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். அதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
பண வரவு அதிகரிக்கும்
வியாபாரம், தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வீட்டுக்குள் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பேச்சிலும், ஆரோக்கியத்திலும் சிறிது கவனம் தேவை. மாதத்தின் இரண்டாம் பகுதியில் அற்புதமான மாற்றங்கள் கிடைக்கும்.
-
ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications