சிம்ம ராசிக்கு அஷ்டமசனியிலும் திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் சனி.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் சிம்ம ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். அஷ்ட சனியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஜூலை மாதத்தின் முதல் 15 ஆம் தேதி வரை அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் லாபத்தில் அமர்ந்திருப்பதால் ஜூலை 15 வரை நல்ல நேரமாக இருக்கும். புதிய வீடு, புதிய கார், புதிய மொபைல், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது என உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். நிறைய லாபங்கள் கிடைக்கும்.
புதிய வாய்ப்புகள் வரும்
புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன், மனைவிக்கிடையே பிணைப்பு உருவாகும். வேலையில் அடுத்து என்ன செய்யலாம், எப்படி செயல்படலாம் என சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். ராசிக்கு செவ்வாய், கேது அமர்ந்திருப்பதால் உடல்நிலையில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இருந்தாலும் அதனை சமாளித்து செல்லும் தைரியம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எந்தப் பிரச்சனை வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உண்டாகும்.
தொழில் மாற்றம்
2 ஆம் வீட்டு அதிபதியும், குருவும், ராசிநாதனும் 11 ஆம் இடத்தில் இருப்பது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், தொழில் மாற்றம், வேறு இடத்துக்கு குடிபெயர்வது, கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரித்தல் போன்றவை உண்டாகும். ஜூலை 15 ஆம் தேதிக்குப் பிறகு சிறிது கவனமாக இருப்பது நல்லது.
வாக்குவாதம் வேண்டாம்
பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. வீட்டுக்குள் வாக்குவாதம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. மனதில் இருப்பதை அப்படியே சொல்லுவதைத் தவிர்த்து நிதானமாகச் செல்வது நல்லது. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தேவையில்லாத விஷயங்களை மற்றவர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
தொழிலில் வெற்றி
உங்களுக்கு தேவைப்படும் விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். அதன் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வத்தில் பரிபூரண அருளைப் பெறுவீர்கள். சனி அஷ்டமத்தில் இருந்தாலும் ஜூலை மாதத்தின் முதல் பாதியில் சனி பகவானே திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். நல்ல ராஜ யோகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
60 வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதயம் சார்ந்த பிரச்சனை, மூச்சு விடுவதில் பிரச்சனை, வேர்த்து கொட்டுவது போன்றவை உண்டாகும் வாய்ப்புள்ளது. சாப்பாடு விஷயத்தில், தூக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய காயத்ரி கேட்பது நல்லது. அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். இல்லையெனில் உடலை தூய்மைப்படுத்திவிட்டு சிவன் பாடல்களை கேட்பது நல்லது. சிவப்பு, வெள்ளை நிற ஆடைகளை உடுத்துவது நல்ல பலன்களைத் தரும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications