விருச்சிக ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. சொத்துகளைக் குவிக்கும் யோகம்.. ராஜா மாதிரி வாழும் காலம்
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் விருச்சிக ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். ராசிநாதன் 10 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். இதுவரை உங்களுக்கான பாக்கியங்கள் அனைத்தும் கைக்கு கிடைக்காமல் இருந்திருக்கும். உங்களுடைய கனவுகள் எல்லாம் பழிக்கும் காலகட்டமாக இருக்கும். தொழில் ஸ்தானம் விழிப்பதால் அக்கவுண்ட், ஆடிட்டிங் போன்ற விஷயங்களைச் செய்வீர்கள்.
தூய்மை
தொழிலில் என்ன செலவு ஏற்பட்டது, என்ன தவறு செய்தோம். ஏன் செலவு செய்தோம் என்று சிந்திக்கும் காலகட்டமாக இருக்கும். வீட்டை தூய்மைப்படுத்துவீர்கள். வேண்டாதவற்றை எல்லாம் தூக்கிப் போட்டுவிடுவீர்கள். வேண்டியதை மட்டும் இனி வைத்துக் கொள்வீர்கள். நீங்கள் விரும்பியதெல்லாம் நினைக்கும் காலகட்டமாக இருக்கும். குரு 8 இல் இருந்தாலும் 2 ஆம் வீட்டிற்கு பார்வை கொடுக்கிறார். இது அற்புதமான கிரக நிலையாகும்.
ராஜயோகம்
மறைவு ஸ்தானத்தில் கிரகங்கள் இருந்தால் வெற்றி, ராஜயோகம் கிடைக்கும். அதனால் உங்களுக்கு குருவால் நல்ல ஏற்றமும், வளர்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் காசு பணம் வந்து சேரும். உங்களுடைய வாழ்க்கையை குறித்த சிந்திக்கத் தொடங்குவீர்கள். சுக்கிரன் நேரடியாக விருச்சிக ராசியைப் பார்ப்பதால் உங்களை அழகுபடுத்திக் கொள்வீர்கள். உங்களுக்கான விஷயங்களில் சிறிது கவனம் செலுத்துவீர்கள்.
குழப்பம்
20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சனி 5 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் மன சஞ்சலம் ஏற்படும். ஏதாவதொன்றை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பீர்கள். சுறுசுறுப்பாக இயங்கும் காலகட்டமாக இருக்கும். மாலை வேளையில் நிலா வெளிச்சத்தில் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல பலன்களைத் தரும். பண வரவு அதிகரிக்கும்.
சொத்து வாங்கும் யோகம்
வீடு, மனை, வாகனம், வண்டி, வாகனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அதில் வெற்றியையும் காண்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்கள் மீதனா தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு சார்ந்த உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். சிவப்பு, பிங்க் நிறங்களைப் பயன்படுத்துவது நன்மையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications