ஆடி மாத பலன் 2025: கடக ராசிக்கு ஆரம்பமாகும் கண்டம்.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் போச்சு

Subscribe to Oneindia Tamil

ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

kadagam-aadi-madha-palan-2025-what-kind-of-benefits-will-get-kadagam-cancer-rasi-people-during-th

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம் ஆடி மாத பலன்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கும். 2 ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து அமர்வதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கும். 12 ஆம் வீட்டு அதிபதியோடு அமர்ந்திருப்பதால் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் யோகம் உண்டாகும். பிடித்த விஷயத்தை பிடித்த மாதிரி செய்து அதன் மூலமாக மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

முன்னேற்றம்

சூரியன் லக்கினத்தில் வந்து அமர்வதால் சோர்வு நீங்கி வலிமையுடன் காணப்படுவீர்கள். டென்சன், சோர்வுகள் நீங்கும். இனி அதிகார தோரணை வரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. பல்வேறு பாதிப்புகளை ஏற்கனவே நீங்கள் சந்தித்திருப்பீர்கள் என்பதால் எந்தவொரு விஷயத்தை செய்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது.

வாக்குறுதி

நாளைக்காக யோசித்து இன்றே சில திட்டங்களை போட்டு, கமிட்மெண்டில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும். இதுநாள் வரை பட்ட கஷ்டங்களில் இருந்து விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும். வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து சிந்திக்கத் தொடங்குவீர்கள். இரண்டாவது குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.

வண்டி வாகன யோகம்

புதிய வாகனம், வண்டி, மொபைல் போன்றவற்றை வாங்கி மகிழ்வீர்கள். புதிய விஷயங்களைத் தொடங்குவீர்கள். நிறைய பேருக்கு அரசியல் ரீதியான தொடர்புகள் ஏற்படும். 2 ஆம் அதிபதி என்றால் சூரியன். சூரியன் வீட்டில் கேது, செவ்வாய் இருப்பதால் கடன், பகை வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.

கடன் வாங்க நேரிடும்

செவ்வாய், கேதுவின் சேர்க்கை நிறைய கடன் வாங்க வைத்து அல்லது உடல் ரீதியான பாதிப்புகளைக் கொடுத்து உங்களை படாதபாடு படுத்தும் வாய்ப்புள்ளதால் கடன், கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஜூலை 27 ஆம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் வாய்ப்புள்ளது. கேதுவுக்கு நேரடியாக ராகு பார்ப்பதால் சட்ட விரோதமான தொழில்களை செய்வதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பெரிய பாதிப்புகளில் சிக்க நேரிடும்.

பிரச்சனைகள்

சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். 12 ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அமர்ந்திருப்பதால் ஏதாவதொரு தேவையில்லாத செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரன் குருவுடன் சேர்ந்திருப்பதால் விரையத்தின் மூலமாக லாபத்தை கொடுத்தும் மீண்டும் விரையத்தை கொடுத்துவிடும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

ஆரோக்கியம்

ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கேதுவால் நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அதன் மூலமாக ஒரு திருப்தி ஏற்படும். படிக்கும் மாணவர்களுக்கு கர்வம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

கவனம்

வண்டி, வாகனம், பயணத்தில் கவனம் தேவை. வயிறு, கிட்னி தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயமும் கண்டிப்பாக நடக்கும் என்று தெரிந்தால் மட்டும் ஒரு விஷயத்தை செய்வது நல்லது. வாய் சவடால் விடுவதை தவிர்ப்பது நல்லது. 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் முதலீடு, ஆரோக்கியத்தில் கவன் தேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+