Rasi Palan This Week: சொல்லி அடிக்கும் கடக ராசி.. இனி தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு உங்கள் வீட்டுக்கு இடதுபுறத்தில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து வருவது நல்லது. கோயிலில் இருந்து வெளிவந்ததும் விநாயகருக்கு என்ன விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த விஷயத்தை சங்கல்பமாக வைத்து விநாயகரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். இப்போது என்ன விஷயத்தை தொடங்கினாலும் எல்லா வேலையும் முடியும்.
புதாதித்ய யோகம்
சூரியன், புதனும் இணைந்து புதாதியத்தை உருவாக்குவதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் திட்டமிடும் விஷயங்களை செய்து முடிப்பீர்கள். தள்ளிப்போன காரியங்கள் எல்லாம், இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். மெடிஷன் சீட்டுகள் கிடைக்கும். நிறைய பேர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு வேலைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
செலவுகள் அதிகரிக்கும்
செலவுகள் அதிகரிக்கும். சுபச் செலவாகவும், தேவையில்லாத ஆடம்பர செலவுகளையும் செய்வீர்கள். தைரிய வீரிய உபஜெய ஸ்தானத்தில் 3 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இருக்க மாட்டார்கள். 100 சதவீதம் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். டாப் கிளாஸ் யோகம் உண்டாகும்.
தொழிலில் அனுகூலம்
தொழில் ரீதியாக இருந்து வந்த அமைப்புகள் அனுகூலத்தை ஏற்படுத்தும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் தேவையற்ற கோபத்தை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தேவையில்லாத இடங்களில் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
விரையங்கள்
விரையங்கள் அதிக அளவில் இருக்கும் என்பதால் விலை உயர்ந்த பொருள்களை கையாளும் கடக ராசியினர் மிகுந்த கவனமாக இருப்பது நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். தொழில் சார்ந்த விஷயங்களில் அனுகூலம் காணப்படும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மன அழுத்தம் எதுவும் இல்லாமல் புதிய தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் அடியெடுத்து வைக்கும் அமைப்பு கடகத்திற்கு அதிக அளவில் ஏற்படும்.
வழிபாடு
துர்க்கை வழிபாடு யோக பலத்தையும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தரும். நினைத்த காரியங்களில் ஏற்றம், சந்தோஷம் உண்டாகும். பொருளாதார ஏற்றமும், சந்தோஷமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications