Kanni Rasi Palan: தடைகளை தவிடு பொடியாக்கும் கன்னி ராசி.. இந்த விஷயத்தில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமும் யோகமும் கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் பலன்களும், சந்தோஷம் அதிகம் காணப்படும். கடல் கடந்த பயணங்கள், கடல் அருகில் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற யோகம் ஏற்படும். ரத்தபந்தங்களுக்கும் உங்களுக்கு இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலத்தை அதிமாகப் பெறுவீர்கள்.
பயணங்கள்
இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். செல்வாக்குகள் கூடும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக எந்தவொரு கவலையும் இல்லாமல் கொண்டு செல்வது நன்மையைத் தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியான பயணங்கள் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
மாற்றம், முன்னேற்றம்
இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம்ஸ உத்தியோக மாற்றம் காணப்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். பதவியில் இருந்து வந்த பாதிப்புகள், தடைகள் நிவர்த்தியாகும். கூட்டாளிகள், விரோதிகள் விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்..
அனுகூலம்
யோகங்களும், அனுகூலமும் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் தேவையில்லாமல் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் நீங்கும். துணை விஷயத்தில், காதல் அமைப்பில் அந்நியோன்யம், அனுகூலம் அதிகரிக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அனுகூலமும், நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
தடைகள் நீங்கும்
இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். பெரிய அளவு நம்பிக்கையும், ஏற்றமும் ஏற்படும். அலர்ஜி, ஒவ்வாமை, சளி தொந்தரவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எளிய முறையில் செரிமானமாகும் உணவுகள், பழம், காய்களிகளை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாமல் குழம்பிக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
நவக்கிரகத்தில் இருக்கும் புதன் பகவான் வழிபாடு சந்தோத்தை அள்ளிக் கொடுக்கும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை படிப்பது நன்மையை ஏற்படுத்தி தரும்.












Click it and Unblock the Notifications