Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும்.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?
சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அல்லது லக்கினம் சார்ந்தவர்கள் மிகுந்த பொறுமை காப்பது நல்லது. ராசி, லக்னத்திலேயே சூரிய கிரகணம் நடப்பது பொதுவாகவே நல்லதல்ல. காலபுருஷனுக்கு 6 ஆம் வீடு என்பது மருத்துவத்துக்கான, எதிரிக்கான, நோய்க்கான, கடனுக்கான வீடு. சூரியன், சந்திரன், கேது இணைவு பொதுவாகவே பாதிப்புகளைக் கொடுக்கும்.
என்ன நடக்கும்
தலைவலி, திடீரென கண் உபாதை, கண்ணாடி போடுவது, கண் கண்ணாடி உடைவது, முகம் பார்க்கும் கண்ணாடி உடைவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு எலும்புகளில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு விபத்துகள் ஏற்படும். அப்பாவுக்கும், உங்களுக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
தலை முழுவதும் நீர் கோர்த்திருப்பதால் தலைவலி பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. அப்பா மற்றும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். காலபுருஷனுக்கு 6 ஆம் வீடாக இருப்பதால், சனியின் குரூர பார்வையில் சிக்குவதாலும் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும்.
கவனம் தேவை
தேவையில்லாத சர்ச்சைகள், கருத்து வேறுபாடுகளில் சிக்குவதைத் தவிர்ப்பது நல்லது. இசையமைப்பாளர்கள், கலைஞர்களுக்கு பெரிய பாதிப்புகள் வரக்கூடிய காலகட்டம் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசியலில், அரசுத் துறைகளில் இருப்பவர்கள், அரசு ஊழியர்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலையை விடக்கூடிய சூழ்நிலை, பெரிய பாதிப்பு, மற்றவர்கள் செய்த குற்றத்துக்கு மாட்டும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
பாதிப்புகளில் இருந்து விடுபட விருதாச்சலம் அருகே உள்ள பூவராகசுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். அங்குள்ள வேத விற்பன்னர்களுக்கு, பிராமணர்களுக்கு செம்பு பாத்திரம், கோதுமை, வெல்லம், தட்சணை வைத்து தானமாகக் கொடுப்பது உங்கள் வாழ்வில் அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications