கன்னி ராசிக்கு திடீர் பண வரவைக் கொடுக்கும் சனி பகவான்.. வக்ரப் பெயர்ச்சியில் வரப்போகும் மாற்றம்
சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி வக்கிரம்
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

காயத்ரி மந்திரம்
சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.
இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி பலன்
உத்திரம், அஸ்தம், சித்திரை ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது கன்னி ராசி. ராசியின் அதிபதி புதன் பகவான். உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ர கதியில் இருக்கிறார். 6 ஆம் இடத்தில் இருக்கும் சனி நிச்சயமாக உங்களுக்கு ஏற்றத்தை கொடுப்பார். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழிலில் மாறுதல்கள் உண்டாகும். புதிய கடன்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
முயற்சிகளில் தடை
போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு சற்று பின்னடைவு ஏற்படும். உங்கள் ராசிக்கு சனி 6 ஆம் இடத்தில் இருப்பதும், ராகுவுடன் சேர்ந்திருப்பதும் விசேஷமாகும். சனி பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தையும், 12 ஆம் இடத்தையும், 3 ஆம் இடத்தையும் பார்ப்பதால் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் ஏற்படும். பார்ட்னர்ஷிப் வியாபாரம் செய்பவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
ஆரோக்கியம்
தந்தையின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். வெளிநாடு, வெளியூர் சென்று வரும் வாய்ப்புள்ளது. 8, 12 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழிலில் மாறுதல்கள் ஏற்படும். புதிய தொழில் அமையும். தொழிலுக்காக அதிக அளவில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. முதலீடு செய்தே ஆக வேண்டும் என்றால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
சொத்து பிரச்சனை
சனி வக்ர பெயர்ச்சி நாலரை மாத காலத்தில் இரண்டாவது ஒன்றரை மாதத்தில் தந்தையின் உடல்நிலை, குடும்ப சொத்துகள், பூர்வீக சொத்துகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு தடைகள் ஏற்படும். 3 வது ஒன்றரை மாத காலகட்டமான அக்டோபர் முதல் நவம்பர் மாத காலகட்டத்தில் எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. திடீர் பண வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
தொழில்
கலைத் துறையில் இருப்பவர்களுக்கு, இசைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஏற்றங்கள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன்களை திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு ஏற்படும். தூக்கமின்மை ஏற்படும். உடல் அலைச்சல் ஏற்படும். முயற்சிகளில் பின்னடைவுகள் ஏற்படும். சென்னையின் அருகில் உள்ள பொளிச்சலூரில் அமைந்துள்ள சனி பகவான் கோயிலுக்குச் சென்று வழிபடுவது அற்புதத்தை ஏற்படுத்தும். சனிக்கிழமை தோறும் காக்கைக்கு சாதம் வைப்பவது நன்மை பயக்கும்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications