Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. வேலையில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 13 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு கூடும் அற்புதமான காலகட்டம். சூரியனின் ஆதிக்கம் கன்னி ராசியில் இருக்கும் மாதம் என்பதால் நரம்பு, கிட்னி கல், ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களில் அதிக கவனமாக இருக்க வேண்டும். திடீரென அலர்ஜியால் பெரிய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பற்கள் விஷயத்தில் மருத்துவர்கள் கூட தவறு செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.
வார்த்தைகளில் கவனம்
வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். சனிக்கிழமை பெருமாள் வழிபாடு, தாயார் வழிபாடு மிகவும் முக்கியமான அமைப்பாக உள்ளது. பயணங்களால் நல்ல அனுகூலம், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் படிப்படியாகத் தீரும்.
சிக்கல் தீரும்
தொழிலில் இருந்த சிக்கல் தீரும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். மனதில் உள்ள பாரங்கள் குறையும். எல்லா விஷயங்களிலும் நல்ல அனுகூலம் காணப்படும். மிகப்பெரிய ஏற்றங்கள், நம்பிக்கையும் ஏற்படும். வாக்குவாதம், தர்க்கம் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
மற்றவர்கள் விஷயத்தில்..
சூடு, சொரணை, ரோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு மூன்று குரங்கு பொம்மைகளைப் போல இருப்பது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை தவிர்த்துக் கொள்வது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்பத்தில் நீங்கள் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
உத்தியோகம்
பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும் நேரம் என்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. எப்போதும், எல்லா விஷயத்திலும் சரியாக இருக்கக் கூடியவர்கள் என்பதால் அதனை எல்லாம் தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தை விட்டு உங்களையே போக வைக்கக் கூடிய நேரம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
கவனம்
குடும்பத்திற்கு உங்கள் வேலை என்பது முக்கியம் என்பதால் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோக விஷயத்தில் சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படிப்புத் தடை ஏற்படும் என்பதால் அதீத கவனம் தேவை. வாகனத்தில் வித்தை காட்டுவதை தவிர்ப்பது நல்லது. வழுக்கலான இடங்களில் செல்லும்போதும், நெருப்பு இருக்கும் இடங்களிலும் கவனம் தேவை.
-
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு?.. கடகம், சிம்மம், கன்னி ராசிக்கான முழு பலன்கள் -
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. இந்த வார பலன்.. முழு விவரம் இதோ -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications