குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: ஜென்ம குரு.. 12 ஆண்டுகளுக்குப் பின் தேடி வரும் திடீர் ஜாக்பாட்
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. கிரகப்பெயர்ச்சியால் சிலருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சித்திரை மாதத்தில் குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரோதி ஆண்டில் ராகு சனி சேர்க்கை ஏற்படப்போகிறது. இந்த கிரகங்களின் மாற்றத்தினால் ரிஷப ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
ரிஷப ராசி: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு லாப ஸ்தானத்திலும் கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். குரு பகவான் 12ஆம் வீட்டில் இருந்து உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனி பகவான் ஆண்டு இறுதியில் விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார்.

தொழிலில் முன்னேற்றம்: செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் இந்த ஆண்டு கிடைக்கும். தண்ணீரில் கண்டம் இருப்பதால் ஆறுகள், அருவிகளில் குளிக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. இந்த ஆண்டு ஆலய தரிசனம் செய்வீர்கள். ஆன்மீக பயணங்களால் உங்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் ஏற்படும்.
ஜென்ம குரு: குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். ஜென்ம குரு என்பதால் பண விசயத்தில் கவனம் தேவை. எவருக்கும் வாக்குறுதி கொடுப்பதோ, பணம் நகையை யாருக்கும் இரவல் தருவதோ வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அசைவ, கார உணவுகளைக் குறையுங்கள். வீண் செலவுகளையும் தவிர்க்கவும்.
பதவி யோகம்: குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் ஆண்டுகளின் மீது விழுகிறது. குரு உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டைப் பார்ப்பதால் திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். மகளுக்கோ, மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்ட நிலை மாறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி நல்லவிதமாக முடியும்.
திருமணம் கைகூடும்: களத்திர ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுவதால் திருமணம் கைகூடி வரும். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். அயல்நாட்டில் இருக்கும் உறவினர்கள் நண்பர்களின் உதவி கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
குரு பார்வை யோகம்: உங்களின் 9ஆம் வீட்டை குரு பார்ப்பதால், வருமானம் அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். தந்தைவழிச் சொத்துகள் வந்து சேரும். பயணங்கள் சாதகமாகும். பதவிகள் பட்டங்கள் கிடைக்கலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். இளைய சகோதர வகையில் நல்லது நடக்கும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். முக்கியப் பொறுப்புகள் தேடி வரும். மனைவி வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும்.
வாகன சேர்க்கை: கேது பகவான் 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் சிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனத்தை வாங்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் நன்றாக நடைபெறும். பெற்றோர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் மருத்துவ செலவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன் யோசனை தேவை. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அரசு வேலை, பதவி உயர்வுக்காக தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். சம்பளம் கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும்.
படிப்பில் அக்கறை தேவை: மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தவும். அதிக அக்கறையோடு படித்தால் மட்டுமே வெற்றிக்கனியை ருசிக்க முடியும். சிலருக்கு கல்வியில் தடை ஏற்படும். குரோதி புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வது நல்லது. சஷ்டி, கிருத்திகை நட்சத்திர நாட்களில் பாலபிஷேகம் செய்து வழிபட பாதிப்புகள் குறையும். சங்கடங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு சாதிப்பீர்கள். குரோதி ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதனைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications