கும்ப ராசிக்கு ஆப்பு வைக்கும் சனி.. கெட்டதிலும் நல்லது நடக்கும் காலம்.. 3 விஷயங்களில் மிக மிக கவனம்
ஆடி மாத பலன் : ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தனை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம் ஆடி மாத பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். 3 விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் வக்கிர கதியில் இருக்கிறார். ராசிநாதன் வக்கிரமாக இருக்கும்போது நமக்குள் தேவையில்லாத சில சிந்தனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்கள் மீது கோபப்படுவது, எரிச்சலூட்டுவது, சலிப்புத்தன்மை போன்றவை உருவாகும். அசதிகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள், மன அழுத்தத்துக்குள் சிக்கும் வாய்ப்புள்ளது.
சோம்பல் நீங்கும்
மற்றபடி அனைத்து விஷயங்களும் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். ராசிநாதன் 2 ஆம் வீட்டில் இருப்பது, 2 ஆம் அதிபதி 4 ஆம் வீட்டிலும், 2, 4 ஆம் அதிபதி 5 ஆம் இடத்துக்குச் செல்வது தாயுடன் சேருவதற்கும், அவர்களுடன் இருப்பதற்குமான வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் மீது பாசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய சுகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நிறைய பேருக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும். சோம்பல்கள் நீங்கும்.
முன்னேற்றம்
2, 4 ஆம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டை பார்ப்பதால் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மனக் குழப்பங்கள், மனப் பிரளயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சில தடைகள், தாமதங்கள் ஏற்படும். மனைவிக்கும், உங்களுக்கும் இணக்கம் ஏற்படும். தாயின் ஆசிர்வாதம் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த ஆடி மாதத்தில் பெரிய குறைகள் எதுவும் ஏற்படாது. வேலையில் பிரம்மாண்ட மாற்றம் ஏற்படும்.
வேலையில் மாற்றம்
வேலையில் பிரம்மாண்ட மாற்றங்கள் ஏற்படும். பிஆர் கிடைக்காதவர்களுக்கு கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட அசிங்கம், அவமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நடக்கும் என்ற நினைத்த விஷயங்கள் நடக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது. ஏழரை சனி நடப்பதால் சில அனுபவங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
ஏமாற்றம்
கும்ப ராசிக்காரர்களுக்கு வீட்டில் அமர்ந்து சில மந்திர ஜெபங்கள், சுவாமி பாடல்களை பாடுவது பாசிட்டிவான சூழல் உருவாகும். படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பு சிறுத மந்தமாகவே இருக்கும். 3, 4 மாதங்களுக்கு அப்படித்தான் இருக்கும். 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களுடைய துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வேலையில் பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சில ஏமாற்றங்கள், தடுமாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆரோக்கியம், முயற்சிகள், பேசும் வார்த்தை, உத்திரவாதம் கொடுப்பதில் கவனம் தேவை. எதன் மீதும் வரும் ஒரு மாதத்துக்கு பற்று இல்லாமல் இருப்பது நல்லது. குழந்தைகளால் உங்களுக்கு சிறிய ஏமாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பிள்ளைகள் சார்ந்த கவலைகள் ஏற்படும். காலபைரவர் வழிபாடு நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். தேய்பிறை அஷ்டமி அன்று உளுந்தவடை வைத்து நெய், தேன் ஊற்றி வழிபடுவது நல்ல ஏற்றத்தை தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications