Rasi Palan This Week: துன்பத்திற்கு குட்பை.. இனி கும்பம் ராசிக்கு எல்லாமே இன்பம்
வார ராசி பலன்: செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான ஆவணி 16 முதல் ஆவணி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான ஏற்றத்தை கொடுக்கும். உத்யோகம், தொழிலில், வியாபாரம், கல்வி ஆகிய அனைத்து விஷயங்களில் உயர்வு இருக்கும். குழந்தைகள் மூலம் பெருமிதம் கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் அனைத்திலும் முன்னேற்றம் காணப்படும். கடந்த காலத்தில் இருந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.
முன்னேற்றம்
மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வீடு, நிலம், வண்டி, வாகனம் போன்ற அசையும், அசையா சொத்து சேர்க்கை ஏற்படும். வெளியூர், வெளி மாநில, வெளி நாடு பயணங்கள் இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத இடத்தில் இருந்து நல்லது கிடைக்கும். ஆச்சர்யபடுமளவுக்கு வாழ்க்கையில் அற்புதமான முன்னேற்றம் இருக்கும்.
மகிழ்ச்சி
தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உத்யோகம், தொழிலில், சமூகத்தில் உங்களின் தனிப்பட்ட செல்வாக்கு நன்கு உயரும். உறவினர்க்ள வருகையால் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் புதுவரவு உண்டு. சுப காரிய தடைகள் விலகும். அடுத்தடுத்து நல்ல செய்திகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.
கவனம்
வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முக்கியமாக வாழ்க்கை துணையின் கால், பாதம், மூட்டு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வளர்ப்பு பிராணிகள், விஷ பூச்சிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் வயிறு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
பரிகாரம்
உங்கள் வீட்டின் அருகில் உள்ள நவகிரக கோயில் சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும். முக்கியமாக சூரிய பகவானுக்கு விளக்கேற்றி தரிசனம் செய்வது சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும். கந்தசஷ்ட கவனத்தை தினசரி உச்சரிப்பது உங்கள் மனதில் நேர்மறையான சிந்தனை நிலைக்க உதவும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications