ஆனி மாத பலன் 2025: கும்ப ராசிக்கு ராஜயோகம், எல்லாமே சூப்பர்.. கோபம் வேண்டாம்.. பேச்சில் ரொம்ப கவனம்
ஆனி மாத பலன்: வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.

பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்காரர்கள் பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியில் 40, 59, 75, 91 ஆவது பாடலை கேட்பது படிப்பது நல்லது. மேலதிகாரிகளின் தொந்தரவுகள் குறையும். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. துணை, குடும்பத்தில் இருப்பவர்களின் சொல் பேச்சை கேட்பது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
கோபம் வேண்டாம்
வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் பேச்சில் கோபத்தை மட்டும் வேண்டவே வேண்டாம். குடும்பம், வேலையிடம், வேலையாட்களிடம் இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது நன்மையை ஏற்படுத்தும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும் நல்ல காலகட்டம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனிப்பட்ட முறையில் செல்வாக்குகல் கைகொடுக்கக் கூடிய காலகட்டம்.
செல்வாக்கு கூடும்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனிப்பட்ட முறையிலான செல்வாக்குகள் கைகொடுக்கும் அனுகூலம் ஏற்படும். லாபம், சந்தோஷம், அசையும் அசையாப் பொருள்கள் சேர்க்கை ஏற்றத்தை ஏற்படுத்தும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கக் கூடிய அனுகூலமான அமைப்பு உண்டாகும்.
வழிபாடு
ஞாயிற்றுக்கிழமைகளில் தெய் வழிபாடுகளை செய்வது அனுகூலத்தை ஏற்படுத்தும். கால் பகுதி, முதுகுத் தண்டுவடம், மூட்டுப் பகுதி, நகப் பகுதிகளில் சிறிய உபத்திரவமும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவ ஆலோசனைகள் எடுத்துக் கொள்ளவில்லை எனில் பெரிய பிரச்சனைகளாக மாறுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அதீத கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும். பிள்ளைகளிடம் பூத கண்ணாடி ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளைப் பற்றி உறவினர்களிடத்திலோ, நண்பர்களிடத்திலோ தேவையில்லாதவற்றை பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தொழில்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக அனுகூலம் ஏற்படும். பழைய பகைமையில் இருந்தாலும் அவர்களிடம் இணக்கமாக நட்பாக செல்வது நல்லது. அவர்களுடன் வாக்குவாதம் செய்தால் பெரிய சங்கடமோ, கஷ்டமோ ஏற்பட்டு மன அழுத்தம் வரை செல்லக்கூடிய பிராப்தம் ஏற்பட்டு விடும். பழைய பகைகளை கிளறி வம்புகளுக்குச் செல்லாமல் இருப்பது நல்லது. குடும்பத்திலும், வெளியிடத்திலும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
-
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications