Chandra Grahan 2025: காசு பணம் துட்டு மணி மணி.. கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று இரவு நடைபெறுகிறது.. இந்த சந்திரகிரகணத்தால் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் கன்னி 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவுக்கு புண்ணியம் கிடைக்கும்.
5 ராசியினர் கவனம்
முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.
யோகமான ராசி
இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
இந்த சந்திரகிரகணத்தால் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசி, லக்கினக்காரர்களுக்கு ஏ கிளாஸ் யோகமான காலகட்டமாக இருக்கும். பொதுவாக 6 ஆம் இடம் என்பது ருணம், ரோகம், சத்ரு ஸ்தானம். இந்த 6 ஆம் இடம் என்பது அவதி கடுமையான நோய்கள், மாத்திரை, மருந்துகளுக்கு செலவிடுவது, கோர்ட் கேஸ் என பஞ்சாயத்து என அழைந்து கொண்டிருப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும். நிலையான வேலை இல்லாமல் இருப்பார்களுக்கு நல்ல பர்மெனன்ட் வேலை கிடைக்கும்.
வீடு அமையும்
கோர்ட், கேஸ், பஞ்சாயத்து போன்றவை தீரும் காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த அழுத்தங்கள் தீரும். எதிர்பார்க்காத பெரிய பணம் வரும். பெரிய அளவிலான கடன்கள் கிடைக்கும். ஒரு வீட்டை விற்று பெரிய வீடு கட்டும் யோகம் உள்ளது. சாக்கடை அருகே உங்களுக்கு வீடு அமையும். ஆனால் அதன் மூலம் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்க்காத அளவுக்கு வளர்ச்சி ஏற்படும்.
ஆரோக்கியத்தில் கவனம்
சித்தி, பெரியம்மாவின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டாலும் காசு, பணத்துக்கு குறைவிருக்காது. 6 ஆம் இடம் எனும் ஸ்தானத்தைப் பொருத்தவரை 85 சதவீதம் பணத்தைக் கொடுக்கும். அதிகாரத்தையும், நான் என்கிற எண்ணத்தையும், திமிர் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். அந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் காலகட்டம்.
வேலைவாய்ப்பு
குழந்தைகளின் பற்களில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். அதற்காக செலவு செய்யும் சூழல் உண்டாகும். நிறைய பேருக்கு பர்மெனென்ட் வேலை, வங்கியில் வேலை கிடைக்கும். மெடிக்கல் சீட்டுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல கல்லூரியில் சீட் கிடைக்கும். மருத்துவர்கள் நிறைய பேர் உருவாவதற்கான வாய்ப்புள்ளது.
பணவரவு
பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது. நல்ல வேலைவாய்ப்பு, பெரிய வீடு கட்டும் யோகம், லோன் கிடைக்கும், பெரிய அளவிலான பணம் வந்து சேரும் நேரமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications