Chandra Grahan 2025: விருச்சிக ராசிக்கு பெண்களால் வரப்போகும் சிக்கல்.. கிரகணத்தில் கண்டம்

Subscribe to Oneindia Tamil

Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று நடைபெறவுள்ளது. இந்த சந்திரகிரகணத்தால் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி (இன்று) சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

Lunar Eclipse Chandhra grahanam Viruchigam

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவு புண்ணியம் கிடைக்கும்.

5 ராசியினர் கவனம்

முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.

யோகமான ராசி

இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.

இந்த சந்திரகிரகணத்தால் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசி, லக்னத்தினர் இந்த சந்திர கிரகணம் உங்களின் நான்காம் இடத்தில் நடைபெறவுள்ளது. பொதுவாக நான்காம் இடம் என்பது கல்வி, சுகம், ஆரோக்கியம், ஒழுக்கம், தொழில் ஆகிய நான்கு அமைப்புகளுக்கும் அதிபதியாவார். எனவே அடுத்த 40 நாட்கள் இந்த விஷயங்களில் கவனமாக தான் இருக்க வேண்டும்.

நிதானம் பிரதானம்

குடும்ப உறவுகளிடம் மோதல் போக்கு ஏற்படும். அம்மாவுடன் மனக்கசப்பு, மோதல் அதிகளவு ஏற்படும். சிலருக்கு அம்மாவை பிரிந்து செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. கவனம் சிதறும், நிதானம் இழப்பீர்கள். எந்த இடத்திலும் பொறுமையை கைவிடாமல் நிதானத்துடன் இருத்தல் அவசியம். திடீரென உங்கள் வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

எதிர்பாலினத்தால் வம்பு

சுய ஒழுக்கம் விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடு வேண்டும். ஆணாக இருந்தால் பெண் விஷயத்திலும், பெண்ணாக இருந்தால் ஆண் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். எதிர்பாலினத்தவரால் உங்கள் மதிப்பு, மரியாதைக்கு பங்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த 40 நாட்கள் நீங்கள் அதிகளவு கவனமாக இருக்க வேண்டியது இந்த விஷயம் தான்.

வீண் விரயம்

வீடு, வண்டி ஆகியவற்றில் வீண் விரயம் ஏற்படும். வீட்டில் நிறைய பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. சேமிப்பு கரையும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரம், பதற்றம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நலம்.

ஆரோக்கியம்

உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்போர் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். கலசத்தில் பச்சரிசி, தர்ப்பை, தட்சணை ஆகியவற்றுடன் முதியவர் ஒருவருக்கு தானம் செய்வதால் பிரச்சனைகள் சற்று குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+