மதுரை சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் கோலாகலம் - ஏப்.14ல் மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம்
மதுரையின் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ் புத்தாண்டு அன்று மீனாட்சி திருக்கல்யாண வைபவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு இன்று கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.
அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

சித்திரை திருவிழா
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெற்ற நிலையில் இந்தாண்டு பக்தர்கள் அனுமதியுடன் வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. சித்திரை திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

முகூர்த்தக்கால் ஊர்வலம்
சித்திரை திருவிழா நடைபெற உள்ளதை தெரிவிக்கும் வகையில் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை, காளைகள் முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மீனாட்சி அம்மன் கோவில் பட்டர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் முகூர்த்தகால் நடப்பட்டது.

மீனாட்சி பட்டாபிஷேகம்
தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12 ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், மறுநாள் 13 ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்குவிஜயமும் நடக்கிறது. அது முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி நடைபெறுகிறது.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இந்தாண்டு தமிழ் புத்தாண்டு ஆன ஏப்ரல் 14 ஆம் தேதி அன்றைக்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி தேரோட்டம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications