Magaram Rasi Palan: மகர ராசிக்கு எடுத்த காரியங்களில் எல்லாம் தடையா?.. இதை பண்ணுங்க போதும்
சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு மகர ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் மிக முக்கிய மாற்றத்தைக் கொடுக்கும். பாக்கிய ஸ்தானம் எனும் 9 ஆம் இடத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. வெளியூர், வெளிநாடுவாசிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யூரோபியன் நேஷன், அல்பெனியா, பாகிஸ்தான், பார்சியா, ஆப்கானிஸ்தான், ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பகுதிகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தள்ளிப்போய் நடக்கும்
இந்த காலகட்டத்தில் பயணங்களில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட்களால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வர வேண்டிய பாஸ்போர்ட் தள்ளிப் போவது, விசா கேன்சலாவது, விசா லாக் ஆவது, தள்ளிப்போய் நடப்பது, வர வேண்டிய நல்ல விஷயங்கள், தகவல்கள் தடைபடுவது போன்றவை ஏற்படும். அதிர்ஷ்டம் கண்டிப்பாக உண்டு. ஆனால், அதிர்ஷ்டத்தை தள்ளிப் போடுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
கேது என்றால் தடை, தாமதம், சட்டத்தைப் பொருத்தவரை உடனடியாக உங்களுக்கு நீதி கிடைக்காது. ஆனால், தாமதமானாலும் உங்களுக்கு நீதி கிடைக்கும். உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க இறை வழிபாடு செய்வது நல்லது. அரசாங்கத்தினால் பிரச்சனை, அப்பாவுடைய ஆரோக்கியத்தில் பிரச்சனை, தொடைப் பகுதிகள், மறைமுகமான பகுதிகளான இடுப்பு, புட்டம், ஆசனவாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பயணங்கள்
வம்சாவழியாக கோயில் காரியங்களில் முன்னின்று நடத்துவதில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. யாரையும் நம்பி தொலைதூர பயணங்களை மேற்கொள்வது நல்லது. அப்படி சென்றால் கண்டிப்பாக பாதிப்புகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. அடுத்த ஒன்றரை மாதத்தில் நீர்வெள்ளம், பூகம்பம், போன்ற இயற்கை அழிவுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
புதிய விஷயங்களை எடுத்துச் செய்யும்போது சிறிய சிறிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. புது விஷயங்களை எடுத்துச் செய்யும்போது சிறிய சிறிய பிரச்சனைகள் வரும். மனப் பொருத்தம் ஏற்படாது. பித்ரு தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டால் கண்டிப்பாக திருமணப் பொருத்தம் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு சிறுசிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குலதெய்வ வழிபாடு செய்வது, தாய்க்கு பாதபூஜை செய்வது உங்களுக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications