Magaram Rasi Palan: மகர ராசிக்கு தங்கத்தை குவிக்கும் யோகம்.. அடுத்தடுத்து பம்பர் பரிசு காத்திருக்கு
மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மகர ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் மகர ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
மகரம்
மகர ராசி மற்றும் லக்னத்தினருக்கு தங்கத்தைக் குவிக்கும் யோகம் உண்டாகும். ராசிக்கு விரய ஸ்தானதிபதியாகவும், மூன்றாம் இடத்துக்கு அதிபதியாகவும் இருக்கக்கூடிய குரு பகவான் 7 ஆம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பதால் பெண்களுடைய ஆசைகள், தேவைகள் பூர்த்தியாகும். தங்கம் வாங்கும் யோகம் ஏற்படும். தனகாரகர், தங்கத்துக்கு காரகம் பெற்றவர் 7 ஆம் இடத்தில் பெற்றிருப்பதால் எவ்வளவு விலை உயர்ந்திருந்தாலும் தங்கத்தை வாங்கும் அளவுக்கு வருமானம் களைகட்டும். சந்தர்ப்பம் சாதகமாக இருக்கும்.
தொழில்
அடமானத்தை வைத்திருக்கும் தங்கத்தை மீட்டெடுக்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாதத்தின் ஆரம்பத்தில் ஜென்ம ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் பெண்கள் சார்ந்த தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஆடை ஆபரணங்கள் சார்ந்த வியாபாரம், தங்க நகை வியாபாரம், கவரிங் நகைகள் சார்ந்த வியாபாரம் நன்றாக இருக்கும்.
சட்டத் துறை
அழகு நிலையம், அழகு சாதனப் பொருள் வியாபாரத்தில் அபாரமான லாபங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனி பகவான், சுக்கிர பகவான் உங்களுக்கு சாதகமாக உள்ளது. செவ்வாய் பகவானும் விரயத்தில் இருப்பதால் சட்டத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகமான காலகட்டமாக இருக்கும். வழக்கு என்ற அமைப்பில் இருப்பவர்களுக்கு அதில் இருந்து விடுதலை பெறும் யோகம் ஏற்படும்.
சண்டை சச்சரவு நீங்கும்
சகோதர காரகன் செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகோதரன் வகையில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். சகோதரி விஷயங்களில் சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். ஒரு சில சுபகாரியங்களை தலைமை ஏற்று நடத்தும் யோகம் ஏற்படும். நல்ல நல்ல விஷயங்கள் நடக்கும் அற்புதமான மாதமாக இந்த மார்கழி மாதம் இருக்கும்.
வழிபாடு
தேவையில்லாத உறவு, நட்பு, உறவுகளிடம் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள குலதெய்வ வழிபாடு செய்வது, குலதெய்வ கோபுரத்துக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வது நன்மை பயக்கும். சனிக்கிழமை நாட்களில் குலதெய்வ விருட்சத்துக்கு கற்பூரம் காட்டி வழிபாடு செய்வது உங்களுக்கு அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications