For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புரட்டாசி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது - ஆன்மீக ரகசியங்கள்

Google Oneindia Tamil News

மதுரை: புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கும் தெய்வீக வழிபாட்டிற்கும் உரிய மாதம் என்பதால் இந்து திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதே போல இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜையோ, கிரகப்பிரவேசமோ செய்ய மாட்டார்கள். பெருமாளுக்கு உகந்த மாதம், 15 நாட்கள் மகாளய பட்சம் முன்னோர்களுக்கு உகந்தது என்பதால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்து விட்டனர்.

எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது. புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு உரியது. இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. இந்துக்கள் தவிர பிற மதத்தினர் திருமணம் செய்கின்றனர். ஆனால் தமிழ் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை.

புரட்டாசி மாதம் மகாளய பட்சம் முன்னோர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. அதே போல பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம், நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடப்படும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர். வளைகாப்பு செய்யலாம்.

புரட்டாசி மாத ராசி பலன்..யாருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்? புரட்டாசி மாத ராசி பலன்..யாருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்?

புரட்டாசி மாத பிறப்பு

புரட்டாசி மாத பிறப்பு

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் பிறக்கப்போகிறது. தெய்வீக வழிபாட்டிற்கு உரிய இந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. இந்துக்கள் தவிர பிற மதத்தினர் திருமணம் செய்கின்றனர். ஆனால் தமிழ் இந்து குடும்பத்தினர் புரட்டாசியில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதில்லை.

பண்டிகை காலங்கள்

பண்டிகை காலங்கள்

பொதுவாக எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். புரட்டாசி மாதம் மகாளய பட்சம் முன்னோர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது. அதே போல பெருமாளுக்கு விரதம் இருக்கும் மாதம், நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடப்படும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுவதை தவிர்த்து விட்டனர்.

வாஸ்து செய்யலாமா?

வாஸ்து செய்யலாமா?

புரட்டாசியில் வீடு கட்ட வாஸ்து செய்யக்கூடாது. வாஸ்து பகவான் உறங்கிக்கொண்டிருப்பார். அவர் சில மாதங்கள் மட்டுமே விழித்திருப்பார். அந்த மாதத்தில் வாஸ்து பூஜை செய்தால் மட்டுமே தடைகள் இன்றி வீடு கட்ட முடியும். அதேபோல இந்த மாதத்தில் வீடு பால்காய்ச்சி குடி போகக்கூடாது. வாடகை வீடாக இருந்தாலும் வீடு குடிபோகக் கூடாது.

சுபகாரியம் செய்ய ஏற்ற மாதங்கள்

சுபகாரியம் செய்ய ஏற்ற மாதங்கள்

சுப காரியங்களை சில குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்யலாம். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் மணமக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் குழந்தை பாக்கியம் நன்றாக அமையும்.

வீடு குடியேறக்கூடாது

வீடு குடியேறக்கூடாது

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது என்று முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர். முன்னோர்களின் வழியை பின்பற்றினால் நமக்கு தொந்தரவு இல்லைதானே.

புரட்டாசி என்ன செய்யலாம்

புரட்டாசி என்ன செய்யலாம்

கர்ப்பிணி பெண்களுக்கு ஒற்றைப்படை மாதமாக புரட்டாசி வரும் பட்சத்தில் வளைகாப்பு நடத்தலாம். அது ஒருநாள் பண்டிகைதான் முடிந்து விடும். அதேபோல புரட்டாசி மாதம் பிறந்தவர்களுக்கு அறுபதாம் கல்யாணம், எண்பதாம் திருமணம் இதனால் பாதிப்பு எதுவும் வருவதில்லை. இந்த மாதம் செப்டம்பர் 25 மற்றும் 26 மட்டுமே நல்ல நாட்கள் உள்ளது அவசியமானால் சில சுபகாரியங்களை மட்டும் செய்யலாம். இந்த மாதம் திருமணம், சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாட்கள் இல்லை.

 புதிய தொழில் தொடங்கலாம்

புதிய தொழில் தொடங்கலாம்

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி பண்டிகை நாளின் கடைசி நாளான விஜய தசமியன்று கல்வி கற்றுக்கொள்ளத் தொடங்கினால் நல்ல கல்வியறிவு கிடைக்கும். வாழ்க்கைக்கும் பயன்படும். அதேபோல விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய விசயங்களை கற்றுக்கொடுக்கத் தொடங்கலாம். புதிய தொழில் தொடங்கலாம் மேன்மேலும் வளரும்.

புரட்டாசியில் திருமணம்

புரட்டாசியில் திருமணம்

புரட்டாசியில் சிலர் மட்டும் புரட்டாசியில் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அது பெருமாள் மாதம். கன்னி மாதம். கன்னி புதனுடையது. தீவிர வைணவ பக்தர்கள் சிலர், பெருமாளுக்கென்று உள்ள மாதம் அது. பெருமாள் வழிபாடு என்று இறைவனுக்கு ஒதுக்கப்பட்டது என்று ஒரு சிலர் அந்த மாதிரி கடைபிடிக்கிறார்கள். ஆனால், புரட்டாசியில் திருமணங்கள் செய்யலாம். அது நல்ல மாதம்தான். மலட்டு மாதம் இல்லை. எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. மகாளய பட்சம், நவராத்திரி பண்டிகைகள் வரும் காலம் என்பதால் பொதுவாக புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்வதை தவிர்த்து வந்தனர்.

English summary
During the month of Purattasi and also during Margazhi marriage related activities are avoided. During Purattasi, pitru paksham Mahalayam is covered for a fortnight.we don't do Grahapravesam house warming ceremony and go to new house in the above months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X