Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனத்துக்கு இனி எல்லாமே டாப் கியர்தான்.. வீடு, கார், தங்க நகைனு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது

Subscribe to Oneindia Tamil

மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது மீனம் ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

may-month-zodiac-sign-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-pisces-in-may-month

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் மீனம் ராசியில் பெறப் போகும் பலன்களை காணலாம்.

மீனம்

உங்களின் செயல்பாட்டால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். மூன்றாம் இடத்தில் உள்ள உங்கள் ராசி நாதன், நான்காம் இடத்துக்கு பெயர்ச்சியாகி இந்த மாதம் முழுவதும் அருமையான பலன்களை கொடுப்பார். நிலம், வீடு, வண்டி, வாகனம், செல்போன், ஆடை, ஆபரணங்கள் என்று சொத்துகள் பல வகையில் இணையும். உத்யோகம் மற்றும் தொழிலில் உயர்வு இருக்கும். பொருளாதாரம் மேம்படும்.

குழந்தை

நீண்ட காலமாக திட்டமிட்ட பல விஷயங்களை வாங்குவதற்கான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றிகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஜென்மத்தில் சனி பகவான் இருக்கிறாரே என்று கவலைப்பட தேவையில்லை. இந்த மாதம் சனியால் பெரியளவுக்கு பாதிப்பு இருக்காது. ஆடம்பர செலவுகள் இருக்கும்.

ஆன்மிகம்

குடும்பத்தினருடன் கடல் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பரிசுகள் கிடைக்கும். நண்பர்களால் நன்மைகள் நடக்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்றிணைவார்கள். நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதுக்கு பிடித்த கோயில்களுக்கு பயணம் செய்வீர்கள். பரிகார பூஜையில் ஈடுபடுவீர்கள்.

கல்வி

உங்களுக்கு தலை வலி கொடுத்து வந்த ராகு பகவான் 12 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். இதனால் இரண்டாவது வாரத்தில் வீண் விரயம் குறையும். சூரியன் மூன்றாம் இடத்துக்கு செல்வதால் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கல்வியில் சிறந்த ஏற்றம் காணப்படும்.

கவனம்

ராகு, சுக்கிரன், சனி உள்ளிட்ட முக்கிய கிரகங்கள் ராசியில் இருப்பதால் முதல் 15 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வாக்குவாதம் அதிகரிக்கும். எனவே வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் மூக்கு நுழைப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பல், கண், எலும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அருகில் உள்ள சிவன் கோயில் செல்வது மற்றும் குல தெய்வ வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், பழநி முருகன் மற்றும் அனுமன் வழிபாடும் தடைகளை நிவர்த்தியாக்கி முன்னேற்றத்தை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+