Rasi palan this week: டாப் கிளாஸ் யோகம் பெறும் மீனம்.. தொழிலில் அற்புதமான மாற்றம் வரப்போகுது
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தொழிலில் ஏற்றம் உண்டாகும். உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மரண பயம் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் ஆராய்ச்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் வண்டி, வாகனம் இயக்கும்போது கவனமாக இருக்குமாறு கூறுவது நல்லது.
சுப விரையங்கள்
சுப விரையங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள், உங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது, வீடு, நிலம், இடம் போன்றவை வாங்குவது, திருமணத்திற்காக செலவு செய்வது என சுபச் செலவுகளை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்க்காத விஷயங்கள் அனைத்தும் கைகொடுக்கும். மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும்.
உடற்பயிற்சி அவசியம்
இதுவரை இழுபறியாக இருந்து வந்த அனைத்து விஷயங்களும் இனி மாறும். அடுத்தடுத்து வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் மாறும். தொழில் ரீதியாக நல்ல மேன்மை காணப்படும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நன்மை பயக்கும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள்.
சொந்த தொழில்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சொந்தமாக தொழிலைத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரத்தில் அதீத நன்மைகள், லாபங்கள் கிடைக்கும். மாற்றமும், முன்னேற்றமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். அடிவயிறு, கழிவுப் பாதை, முதுகுத் தண்டுவடம், மூட்டு வலி, பாதம் தொடர்பான விஷயங்களில் சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் உரிய மருத்துவ ஆலோசனைகள் பெறுவது நல்லது.
வழிபாடு
சளிப் பிரச்சனை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. மீன ராசியினர் வெள்ளிக்கிழமையில் பார்வதி தேவி வழிபாடு செய்வது அனுகூலத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். துர்க்கை வழிபாடு செய்வது நம்பிக்கையை தரும்.












Click it and Unblock the Notifications