சொல்லி அடிக்கும் கில்லியாக மாறும் மீனம் ராசி.. ஓராண்டில் நடக்கப்போகும் சூப்பர் மாற்றம்.. அதிர்ஷ்டம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: புதிய நம்பிக்கை, எதிர்பார்ப்புகளுடன் இந்த வாரம் தொடங்கியுள்ளது. தடைபட்ட காரியங்கள் இந்த வாரத்திலாவது நடைபெறுமா என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரத்தில் மீன ராசிக்கு கிடைக்கக் கூடிய பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

நம் ராசி பலன்களுக்கு சனி, குரு, ராகு கேது மாறியான கிரகங்களின் அமைப்பு மட்டுமே முக்கியமல்ல. வருடாந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களை போலவே மாதந்திர பெயர்ச்சியாகும் கிரகங்களின் அமைப்பு முக்கியம். ஒவ்வொரு வாரமும் கிரக நிலைகளில் மாற்ற இருக்கும். ஆனி மாதத்தின் கடைசி மாதமாகும்.

Weekly rasi palan Meenam Lucky zodiac signs

அடுத்த வாரம் ஆடி மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் 7.7.2025 முதல் 13.7.2025 வரையிலான காலகட்டத்தில் 12 ராசிகளுக்குமான வார ராசி பலன்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்தக் கட்டுரையில் மீனம் ராசிக்கான பலன்களை காணலாம்.

மீனம்

மீனம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம் படிப்பில் இந்த ஓராண்டுக்கு அற்புதமான யோகம் நடக்கும். கணவன், மனைக்கு இடையே இருந்த மனத் தாங்கல்கள் நீங்கும். பிரச்சனைகள் அனைத்தையும் சரிகட்டும் காலகட்டமாக இருக்கும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். முதுகுதண்டுவடத்தில் வரும் பிரச்சனைகளை உடனடியாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சி அவசியம்

தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும். ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ரத்தத்தில் வரும் பிரச்சனைகள், பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. ஜென்மத்தில் சனி இருப்பதால் உடற்பயிற்சி செய்வது பரிகாரமாக அமையும். ஆன்மிக கோயில்களுக்குச் சென்று வருவது, கும்பாபிஷேகம் செய்யும் இடத்தில் பணிகளை செய்து கொடுப்பீர்கள்.

பயணம்

முதலீடுகளுக்கு குறைவே இருக்காது. வேற்று மொழி மனதர்களால் ஆதாயம் ஏற்படும். உள்ளூர், வெளியூர், கடல் சார்ந்த பயணங்கள் மூலமாக அற்புதமான ஏற்றத்தை தரும். எந்தவொரு காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். உறவுகளிடத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பேசும் வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

ஆரோக்கியம்

உடல்நலம் சார்ந்த விஷயங்களில் அசாதாரணமாக இல்லாமல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சிறிய பிரச்சனைகள் வந்தாலும் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நன்மையை ஏற்படுத்தும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும்.

முன்னேற்றம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் பெறும் யோகம் உண்டு. வரும் ஓராண்டுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் அனைத்து வித முன்னேற்றமும் ஏற்படும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ரத்தத்தில் பரவக்கூடிய நோய்கள், ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், ஹார்மோன் குறைபாடு, ஹிமோகுளோபின் போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+