Rasi Palan This Week: ஜென்ம சனிக்கு ரெஸ்ட்.. மீனம் ராசிக்கு இனி எல்லாமே பெஸ்ட்
வார ராசி பலன்: செப்டம்பர் 9 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமாக இருக்கும். உத்யோகம், தொழில் இரண்டிலும் சிறப்பான உயர்வு காணப்படும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு. பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும். முதலீடுகளுக்கு எந்த குறையும் இருக்காது. உத்யோகம், தொழிலில் கடந்த காலங்களில் இருந்த தடைகள் தூள் தூளாக உடையும். முதலீட்டில் லாபம் அதிகமாகும்.
அதிர்ஷ்டம்
சட்ட சிக்கல்கள், எதிரிகள் பிரச்சனை ஆகியவற்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். நீங்களே எதிர்பாராத வகையில் இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி குவியும். பெற்றோர், பெரியவர்கள் மூலம் ஆதாயம் உண்டு. திடீர் அதிரஷ்டத்தால் திக்கு முக்காடுவீர்கள்.
புதிய வாய்ப்பு
குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்யோகத்தில் இதுநாள் வரை இருந்த தடைகள் விலகி, உங்களின் திறமைக்கேற்ற பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட புதிய பொறுப்புகள் தேடி வரும். சிலருக்கு மனதிற்கு எதிர்பார்த்தபடி புதிய உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. நீண்ட காலமாக திட்டமிட்ட புதிய தொழில் தொடங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
லாபம்
கல்வியில் அருமையான முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலத்தை நினைத்து திட்டமிட்டபடியான வாய்ப்புகள் கிடைக்கும். கல்விக்காக தொலைதூர பயணம் மேற்கொள்ளும் சூழல் உள்ளது. சுப காரிய தடைகள் விலகும். சேமிப்பு இரட்டிப்பாகும். பணச்சீட்டு, நகை சீட்டு, பங்குச்சந்தை ஆகியவற்றில் சிறப்பான லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் அந்யோநியம் அதிகரிக்கும்.
கவனம்
ஜென்ம சனி இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். வார்த்தைகளில் கவனம் வேண்டும். உறவுகள், நண்பர்கள், உத்யோகம், தொழில் எல்லா இடங்களிலும் நிதானத்தை கடைபிடிக்கவும். வாக்குவாதம் தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். ரத்தத்தில் பரவும் நோய், பரம்பரையாக மரபணுவில் உள்ள நோய் ஆகியவற்றில் மிகுந்த கவனம் வேண்டும். உடற்பயிற்சியை வாடிக்கையாக்கி கொள்ளுங்கள்.
பரிகாரம்
மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தில் அந்நியர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பிறர் குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடு இருக்கவே கூடாது. வியாழக்கிழமை தோறும் ராகவேந்திரை வழிபடுவதன் மூலம் மனக்குறைகள் நீங்கி வெற்றி பாதைக்கு செல்வீர்கள்.












Click it and Unblock the Notifications