சனி, குருவின் அருளால் மேஷத்துக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்.. சனி வக்கிரமாவது சாதகமா?.. பாதகமா?

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

சனி வக்கிரம்

ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

Sani vakra peyarchi mesham

காயத்ரி மந்திரம்

சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.

உங்களுடைய பூர்வ ஜென்ம புண்ணியங்களுக்கு காரணகர்த்தாக திகழ்பவர் சனி. சனி உச்சம் பெறக்கூடிய இடம் துலாம். சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். சனி பகவானுக்கு மேற்கில் மிகுந்த சக்தி அதிகம். இரவு நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சனியின் மூலமாக அதீத ஆற்றல் உண்டாகும். சனி பகவானுக்குரியது வன்னி மரம். பேரிச்சம்பழம், மாதுளை சனிக்குரிய பழமாகும். உலோகம் இரும்பு. தோலில் செய்யக்கூடிய பொருள்கள் சனிக்கு உண்டானது.

சனியின் தாக்கம்

துப்புரவுப் பணியாளர்கள், உடல் சார்ந்த வேலைகளை செய்பவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். சனியின் மூலமாக வேலையில் ஏற்றம், வேலை மாற்றம், அரசியலில் செல்வாக்கு பெறுவது சனி பகவானால் தான். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் சனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சனி வக்கிரகதி அடைவதாலும், குருவின் பார்வை இருப்பதாலும் அரசாங்கம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் விமானங்கள், ரயில்கள் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி பலன்

அஸ்வினி, பரணி, கிருத்திகை ஆகிய 3 நட்சத்திரங்கள் 9 பாதங்களைக் கொண்டது மேஷ ராசி. உங்கள் ராசியாதிபதி செவ்வாய். சனி பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருப்பது அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆட்சி பெற்ற சனியாகவும், குருவின் பார்வை இருப்பதாலும், ராகுவோடு சேர்ந்திருப்பதாலும் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைத்திருக்கும். தற்போது சனி வக்கிர கதியில் இருப்பதால் தொழிலில் லாபங்கள் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

தொழிலில் மாற்றம்

மூத்த சகோதரர்கள் மூலமாக சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்புள்ளது. இரண்டாவது திருமணத்துக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பின்னடைவான காலகட்டமாக இருக்கும். கர்மக்காரகன் என்பதால் தொழிலில் நிறைய மாற்றங்களும், ஏற்றங்களும் இருக்கும். நிறைய முதலீடு செய்து தொழில் செய்யும் வாய்ப்புகள் ஏற்படும்.

ஆரோக்கியம்

11 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய லாப ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெற்ற சனியாக இருந்து வக்கிரகதி அடைகிறார். பூரட்டாதி 3 ஆம் பாதத்தில் வக்கிரகதி அடைந்து பூரட்டாதி 1 ஆம் பாதத்தில் வக்கிர நிவர்த்தியாகிறார். இந்த 4 1/2 மாத காலகட்டத்தில் முதல் ஒரு மாதத்துக்கு ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் உடல்நிலையில் சற்று பின்னடைவை கொடுப்பார்.

முயற்சிகளில் கவனம்

ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் 3, 7, 10 ஆகிய மூன்று இடத்தைப் பார்க்கிறார். மேஷம், சிம்மம், விருச்சிகத்தைப் பார்க்கும் இந்த காலகட்டத்தில்

ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது மிகவும் அவசியம். எடுத்த காரியங்கள் அனைத்திலும் ஏற்றம் காண்பீர்கள். புதிய முயற்சிகளில் பின்னடைவு அடைவதற்கான வாய்ப்புள்ளது.

தொழிலில் ஏற்றம்

உங்களுடைய ராசியை சனி பார்ப்பதால் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். குருவின் பார்வை சனிக்கு இருப்பதால் குழப்பத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. தொழிலில் அபரிமிதமான ஏற்றம் காணப்படும். உங்களுடைய ராசிக்கு தொழிலில் மூலதனங்கள் அதிக அளவில் போடாமல் இருப்பது நல்லது. குழந்தைகள் மூலமாக சிறு சிறு பிரச்சனைகள் வந்து சரியாகும்.

பின்னடைவு

வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு சற்று பின்னடைவு ஏற்படும். இருந்தாலும் சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும். மாணவர்களுக்கு கவனச் சிதறல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தாய் தந்தையின் உடல்நிலையில் நல்ல ஏற்றம் உண்டாகும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை, வழிபாடு

உங்கள் ராசிக்கு இந்த சனி வக்கிர காலத்தில் ஆரோக்கியத்தில், புதுமுயற்சிகளில் முதலீடு செய்வதில் கவனம். தொழிலில் பெரிய ஏற்றங்கள் ஏற்பட்டாலும் லாபம் சுமாராகவே இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலமாக பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பேச்சில் கவனம் தேவை. குருவின் பார்வை இருப்பதால் அனைத்து நன்மையும் கிடைக்கும். ஈரோடு அருகே உள்ள கொடுமுடியில் சனி பகவானை வழிபட்டு வருவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சனிக்கிழமைதோறும் காகத்துக்கு உணவளிப்பது சனியின் தாக்கத்தில் இருந்து உங்களைக் காக்கும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+