மேஷ ராசிக்கு 7 நாட்களில் நடக்கப்போகும் அதிசயம்.. வாக்குவாதத்தால் ஆபத்து நிச்சயம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு நல்ல விஷயங்களும் அடுத்தடுத்து நடக்கும் காலகட்டமாக இருக்கும். அதிக அளவிலான விரையங்கள் ஏற்பட்டாலும் நல்லவை நடக்கக்கூடிய வாரமாக இருக்கும். எந்தவொரு காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கான யோகம் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த நிலைகள் எல்லாம் இனி மாறும்.
பறந்து போகும் பிரச்சனைகள்
பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும் காலகட்டம். பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குருவின் பார்வையால் சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் இதுவரை கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்ய குறைபாடுகள் இருந்திருக்கும். பெற்றோர், பெரியவர்களுடன் சிறு சிறு பிரச்சனைகள் இருந்திருக்கும். அந்த நிலைமைகள் அனைத்தும் பனிபோல் விலகும்.
லாபம் உண்டாகும்
லாபம் அபரிமிதமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த செயல்களில் வெற்றியைக் காண்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஏற்றமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் வளர்ச்சியைக் காண்பீர்கள். அதன் மூலம் சந்தோஷம் உண்டாகும்.
தடைகள் நீங்கும்
உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் உங்களை விட்டு விலகியும், தோற்றும் போகக்கூடிய காலகட்டம். மனஅழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் நீங்கும். புதிய நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து செல்வாக்கு அதிகரிக்கும்.
வீடு வாங்கும் யோகம்
நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். அதற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். நிலம், அறக்கட்டளை தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். முதலீடுகள் அதிகரிக்கும். தெய்வ காரியங்களைச் செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
செவ்வாய்க்கிழமை தோறும் முருகர் வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும்.மரண பயம் பரிபூரணமாக நீங்கும். முதுகு, கை, கால் வலி, சுழுக்கு போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஏற்றமும், அனுகூலமும் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தாய், தந்தை வழி உறவுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications