Rasi Palan This Week: மேஷ ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும்.. சொத்துகள் சேர்க்கும் யோகம்
வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட ஏற்றங்கள் மன நிறைவைக் கொடுக்கும். நிறைய அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள், மனதிற்குப் பிடித்த மனிதர்களை சந்திப்பீர்கள். பெயர், புகழ் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்த சிக்கல்கள் படிப்படியாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடைபெறும்.
அனுகூலம்
நல்ல அனுகூலங்கள் காணப்படும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். பண வரவு ஏற்படும். இதுவரை எந்த விஷயத்தை தொட்டாலும் அதில் ஏதாவதொரு தடங்கல்களைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். இழுபறியாக இருந்த விஷயங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தொழிலில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும்.
தடைகள் தவிடுபொடியாகும்
தடைகளை தவிடுபொடியாக்கிச் செல்வீர்கள். வேற்று மொழி பேசும் நபர்களால் அதிகளவில் ஆதாயம் கிடைக்கும். முதலீடுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. எதிரிகள் தங்களுடைய பலத்தை இழப்பார்கள். வழக்குகள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் எல்லாம் இனி வெற்றி பெறும் யோகம் உண்டு.
சோம்பல் நீங்கும்
மேஷம் என்றாலே சோம்பல், தள்ளிப்போடுவது என்ற நிலை இருந்திருக்கும். அதுபோன்ற நிலைமை எல்லாம் மாறி, இந்த மாதத்தில் எல்லா விஷயங்களை எடுத்து முடிப்பீர்கள். வருமான வரி, ஜிஎஸ்டி கட்டுவது போன்றவற்றைச் செய்வீர்கள். தொழிலில் அதிக அக்கறை கொள்வீர்கள். புதிய தொழில்களைச் செய்வதற்கான நல்ல காலகட்டமாக இருக்கும்.
பண வரவு
பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சுபகாரியத்தில் இருந்த சிக்கல் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் பெருகும். காதல் அமைப்பு உங்களுக்கு கைகொடுக்கும். பெற்றோர், பெரியவர்கள், மற்றவர்கள் என ஒதுங்கிப் போன அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள். முதலீடுகளுக்கு குறைவு ஏற்படாது.
வழிபாடு
வங்கிகளில் உள்ள கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். வெற்றிகரமாக பண சேர்க்கை செய்வீர்கள். முதுகுத்தண்டுவடம், கழுத்துப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும். வெள்ளிக்கிழமைகளில் தெய்வ வழிபாடு, அம்பாள் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
-
7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications