மிதுன ராசிக்கு புது வீடு, கார், நிலம் வாங்கும் யோகம்.. 48 நாட்களில் நடக்கப் போகும் பிரம்மாண்ட மாற்றம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு செவ்வாய் 6க்கு உரியவர். கடன், நோய், வம்பு, பகை, வழக்கை கொடுக்கக் கூடியவர். லாபத்தைக் கொடுக்கக் கூடியவரும் அவரே. தற்போது ராசிக்கு 4 ஆம் இடமான சுக ஸ்தானத்தில் வந்து அமரப் போகிறார். 8 ஆம் பார்வையாக 11 ஆம் இடத்தை செவ்வாய் பார்த்து தன் வீட்டை தானே வலுப்படுத்துகிறார்.
இடம், நிலம் வாங்கும் யோகம்
11 ஆம் இடம் என்பது லாப ஸ்தானம். மனமகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். மூத்த சகோதரர்கள் மூலமாக நல்லது செய்யக்கூடிய நேரமாக இருக்கும். கடந்த 3 மாதங்களாக செவ்வாய் நீச்சத் தன்மையில், கேதுவுடன் சேர்ந்திருந்தால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். பாகப் பிரச்சனை, சொத்துப் பிரச்சனையில் தீர்வு கிடைக்கும். 4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் இடம், நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். அதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடம், நிலம் அமையும்.
வீடு வாங்கும் யோகம்
வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான யோகமும் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது, கடன் வாங்கி வீடு கட்டுவது, வீடு வாங்குவது போன்றவற்றைச் செய்து மகிழ்வீர்கள். கணவன், மனைவியால் இடம், நிலம் சார்ந்த விஷயங்களில் யோகம் ஏற்படும். அதிகாரம், மேலாண்மையைக் கொடுக்கும். தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வரும். சீருடை அணிந்து பணிவோருக்கு நன்மை பயக்கும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்
செவ்வாய் பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜூலை மாதம் 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை பயணிக்கிறார். சூரியன் உங்களுக்கு 3க்கு உரியவர். தன்னம்பிக்கை, தைரியம், வீரியம் அதிகரிக்கும். தூர தேச பயணங்கள் மேற்கொள்வீர்கள். அரசாங்க வேலை கிடைக்கும். உத்தியோக மாற்றம், ஊர்மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசுத் துறை சார்ந்த வேலை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அதற்காக போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவீர்கள்.
நிலம் விற்கும் யோகம்
தந்தை தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். அவருடைய உடல்நிலையில் அக்கறை செலுத்துவீர்கள். தந்தையின் ஊருக்குச் சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக விற்பனை ஆகாத நிலங்கள் விற்கும் வாய்ப்பு வரும். அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். ஆகஸ்ட் 13 முதல் செப்படம்பர் 2 ஆம் தேதி வரை சந்திரனின் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார்.
எச்சரிக்கை
இந்த காலகட்டத்தில் தாயைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தாயின் சொத்துகள் வந்து சேரும். தாயின் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகளில் ஏற்றம் பெறுவீர்கள். கடன் வாங்கலாமா, அடைக்கலமா போன்ற பணத்தைப் பற்றிய சிந்தனை ஓட்டங்கள் அதிகரிக்கும். வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ் தொடர்பான விஷயங்களில் கவனம், எச்சரிக்கை தேலை. வாக்குறுதிகள் கொடுக்கும்போது கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.
முன்னேற்றம்
செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரை செவ்வாய் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்றம், உத்தியோக மாற்றம் உண்டாகும். உங்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தவர்களை கண்டறிவீர்கள். லாபத்தை அனுபவிக்கும் காலகட்டமாக இருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications