Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் மிதுன ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
வார ராசி பலன்: ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும் காலகட்டமாக இருக்கும். தொழிலில் காணப்பட்டு வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோகம் மாற்றம் போன்றவற்றில் இருந்து வந்த பிரச்சனைகள், சிக்கல்கள் நீங்கும். தைரியம், நம்பிக்கை ஏற்படும்.
பதவி உயர்வு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தைரியம், நம்பிக்கை உண்டாகும். சம்பள உயர்வு கிடைக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகப்பெரிய ஏற்றத்தைப் பெறும் மாதமாக இந்த ஆவணி மாதமாக இருக்கும். மேலதிகாரிகளுக்கும், உங்களுக்கும் இருந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.
பொற்காலம்
வாரத்தின் முதல் 2 நாளில் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், பயணங்கள் விஷயத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி எந்த பாதிப்புகளும் வராது. 2 ம் இடத்தில் சூரியன் நல்ல நிலைமையில் இருக்கிறார். புதன் பூசம் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். விரைவிலேயே புதனின் சொந்த நட்சத்திரத்திலேயே வருவதால் பொற்காலமாக இருக்கும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும்.
பண வரவு கொட்டும்
உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு தொடர்பான வேலைகள், அரசு தொடர்பான பணங்கள், பிஎப் பணங்கள் போன்றவை வந்து சேரும். வங்கியில் இருந்து வர வேண்டிய பணங்கள் வரும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் காலகட்டம். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அனுகூலம், வழிபாடு
காசு, பணம், பொருளாதார விஷயங்களில் அற்புதமான ஏற்றம், அனுகூலம் ஏற்படும். கஜலட்சுமி வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கம். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 75 சதவீத முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். அற்புதமான வாரமாக உங்களுக்கு இந்த வாரம் நிச்சயம் அமையும். சிக்கல்கள் அனைத்தும் தீரும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் காலகட்டமாக இருக்கும். சிவன் வழிபாடு சகல விதத்தில் ஏற்றத்தைக் கொடுக்கும். சிவ மந்திரங்களை உச்சரிப்பது பெரிய நம்பிக்கையையும், தைரியத்தையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications