Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசி பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள்

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு ராசி பலன்: புதுமையைத் தரும் புத்தாண்டாக இந்த 2026 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த வருடம் எப்படி அமையும் என்ற ஆவல் அனைவருக்குமே இருக்கும். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

New year rasi palan puthandu rasi palan lucky zodiac signs

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சவாலான ஆண்டாக இருக்கும். உங்களுடைய பொறுமையை சோதிக்கும் சூழ்நிலை ஏற்படும். தொழில் தொடர்பான விஷயங்கள், நிதி, உறவுகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். அனுமன் வழிபாடு, அனுமன் சாலிசா கேட்பது படிப்பது நன்மை பயக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு முன்னேற்றத்திற்கான ஆண்டாக இருக்கும். வரும் குருப்பெயர் உங்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான விஷயங்களில் நன்மைகள் கிடைக்கும். திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் ஏழைகளுக்கு தானம் கொடுப்பது ஏற்றத்தை தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு அற்புதமான ஆண்டாக இருக்கும். மீடியா துறையினர், ஆசிரியர்கள், தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் நிறைந்த ஆண்டாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். திருமணம் நடக்கும் யோகம் உள்ளது. புதன்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மை பயக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஆண்டாக இருக்கம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்யத் தொடங்குவீர்கள். சிவன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் வரும். திடீர் பண வரவு உண்டாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குலதெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அலுவலகம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்டு செலவிடுவது நன்மை பயக்கும். காதல் உறவுகளில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பைக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். பறவைகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பெயர், புகழ், அங்கீகாரம் கிடைக்கும் ஆண்டாக இருக்கும். கலைத் துறை, சினிமா துறையினருக்கு முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. லட்சுமி வழிபாடு உங்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு மாற்றத்திற்கான ஆண்டாக இருக்கும். திடீர் லாபம் ஏற்படும். வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். முருகர் வழிபாடு உங்களுக்கு மன நிம்மதியைத் தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கும். குரு பகவான் நல்ல நிலையில் இருப்பதால் செல்வம் பெருகும். பிள்ளைகள் விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும். வியாழக்கிழமை தோறும் கடலைப்பருப்பு தானமாக அளிப்பது நன்மையைத் தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் உங்களுடைய வேகம் சற்று குறையும். ஆனால், உறுதியுடன் செயல்படுவீர்கள். பொறுப்புகள் கூடும் ஆண்டாக இருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். சனிக்கிழமை தோறும் சுவாமிக்கு தீபம் ஏற்றுவது ஏற்றத்தை தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பை போடும் ஆண்டாக இருக்கும். சோம்பலை விட்டுவிட்டு திட்டமிட்டு காரியங்களை முடிப்பது நல்லது. விரயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் சேமிப்பில் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. ஏழைகளுக்கு தானம் கொடுப்பது, உதவுவது நன்மையைத் தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சுற்றுலா செல்லும் யோகம் உண்டு. நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஏழைகளுக்கு உதவுவது, தானம் கொடுப்பது, தர்ம காரியங்களில் ஈடுபடுவது போன்றவற்றை செய்யும் யோகம் ஏற்படும். விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது ஏற்றத்தை தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+