Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிச்சான்பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. 2026 புத்தாண்டில் அரசு வேலை பெற போகும் 6 ராசிகள்

Subscribe to Oneindia Tamil

2026 புத்தாண்டு பலன்கள்: 2026 புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. புதிய வருடத்தில் பல நல்ல விஷயங்களை எதிர்நோக்கி காத்திருப்போம். முக்கியமாக கடந்த சில வருடங்களாக திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட சுப காரியங்களுக்காக எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் இருப்பார்கள். அரசு வேலை கிடைப்பதற்காக லட்சணக்கான மக்கள் நீண்ட காலமாக போட்டி தேர்விற்கு முயற்சி செய்து வருகிறார்கள். 2026 புத்தாண்டில் ஏராளமான கிரகங்களில் மாற்றம் உள்ளது. இதன் மூலம் அரசு உத்யோகம் கிடைக்க போகும் 6 அதிர்ஷ்ட ராசிகளை இந்த கட்டுரையில் காணலாம்.

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 10 ஆம் இடத்தை குறிப்பது அரசு உத்யோகம். செவ்வாய், சனி கிரகங்களின் அமைப்பும் குரு பார்வையும் அரசு பணிக்கு முக்கியமானது. இந்த கிரகங்கள் 10 ஆம் இடத்தில் கைக்கூடி வந்தால் அரசு உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் வலுவாக இருந்தாலும் அரசு உத்யோகம் கிடைக்கும்.

new-year-rasi-palan-these-6-zodiac-signs-will-get-government-jobs-in-2026-newyear

மேஷம், ரிஷபம்

அரசு கிரகமான சூரியன் - செவ்வாய் இணைந்திருந்தாலும் அரசு உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. லக்னத்தில் இருந்து உங்களின் 6 ஆம் இடம் வலுவாக இருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும். அதேநேரத்தில் உங்கள் ராசிக்கு 6, 8, 12 ஆம் இடங்களில் தசா புத்தி நடந்தால் அரசு வேலை கிடைப்பது மிகவும் சந்தேகம் தான்.

2026 புதிய வருடத்தில் மேஷம் ராசிக்கு அரசு உத்யோகம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் அங்கு உச்சமடைகிறார். மேஷத்துக்கு குரு பகவான் பாக்கியாதிபதி. அவரின் பார்வை 10 ஆம் இடத்தில் விழுவதுடன், சனி அமைப்பும் இருப்பதால் நிச்சயம் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

மிதுனம், துலாம்

ரிஷபம் ராசிக்கும் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு நன்குள்ளது. முதல் 6 மாதங்களில் குரு பார்வை 10 ஆம் இடத்தில் விழுகிறது. தவிர 10 ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளார். குரு ராகு சண்டாள யோகம் உருவாவதால் அரசு பணி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சனி 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் உள்ளார். அதனால் ரிஷப ராசிக்கும் முதல் 5 மாதங்களிலேயே அரசு பணிக்கான வாய்ப்புள்ளது.

மிதுனம் ராசிக்கு அரசு உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குரு பகவான் ராசியில் இருப்பதாலும், சனி பகவான் 10 ஆம் இடத்தில் இருப்பதாலும் அரசு பணி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்கு குரு பகவான் 10 ஆம் இடத்தில் உச்சமாகிறார். அதனால் துலாம் ராசி போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இதேபோல குரு பார்வை காரணமாக கன்னி மற்றும் மகர ராசிகளுக்கும் அரசு உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+