ஆடி அமாவாசை..சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி
ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை முதல் 30ஆம் தேதி வரை தனியார் வாகனங்களில் செல்வதற்கு அனுமதி இல்லை.
திருநெல்வேலி: ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று முதல் தனியார் வாகனங்களில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் 30ஆம் தேதி வரை தனியார் வாகனங்களில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி முன்னேற்பாடுகளை செய்துள்ள மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து காரையாறு வரை 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் இன்று வரை சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இன்று முதல் தனியார் வாகனங்களில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது பொருட்களை கோவிலில் இறக்கி வைத்து விட்டு, சாமி தரிசனம் செய்த பின்னர் இரவில் தங்காமல் வாகனங்களில் கீழே இறங்கி வந்து விட வேண்டும்.
கோவிலில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது. மேலும் ஏற்கனவே அறிவித்தது போன்று நாளை திங்கட்கிழமை பக்தர்கள் தனியார் வாகனங்களில் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
செவ்வாய்க்கிழமை முதல் 30ஆம் தேதி வரை தனியார் வாகனங்களில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. தனியார் வாகனங்களை அகஸ்தியர்பட்டியில் விட்டு விட்டு, அரசு பஸ்களின் மூலமே பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications