ஆடி மாதத்தில் சுற்றுலா.. முண்டகக் கண்ணியம்மன்..கோலவிழியம்மனை தரிசிக்க கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலாவிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.700 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஆன்மீக சுற்றுலாவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா கடந்த 17ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை அம்மன் கோவில்கள்
ஆடி அம்மன் சுற்றுலா 1 ல் சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து புறப்பட்டு காளிகாம்பாள் கோயில், பாரிமுனை அங்காள பரமேஸ்வரி கோயில், ராயபுரம் வடிவுடையம்மன் கோயில், திருவொற்றியூர் பவானி அம்மன் கோயில், பெரியபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், புட்லூர்-திருவுடையம்மன் கோயில், திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோயில், திருமுல்லைவாயல் செய்யாத்தம்மன் கோயில், கொரட்டூர் பாலியம்மன் கோயில், வில்லிவாக்கம் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.900 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலை கோலவிழியம்மன்
மேலும், ஆடி அம்மன் சுற்றுலா 2 - ல் சென்னை திருவல்லிக்கேணி சுற்றுலா வளாகத்திலிருந்து புறப்பட்டு கற்பகாம்பாள் கோயில், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில், மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோயில், மயிலாப்பூர் ஆலயம்மன் கோயில், தேனாம்பேட்டை முப்பாத்தம்மன் கோயில்களில் தரிசனம் செய்யலாம்.

அம்மன் கோவில்களை தரிசிக்க ஏற்பாடு
தி.நகர் பிடாரி இளங்காளி அம்மன் கோயில், சைதாப்பேட்டை அஷ்டலெஷ்மி கோயில், பெசன்ட் நகர் காமாட்சி அம்மன் கோயில், மாங்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு பாதாள பொன்னியம்மன் கோயில், கீழ்ப்பாக்கம் கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு
இந்த சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கான கட்டணமாக 700 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் ஆன்மிக அன்பர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications