திருமணத் தடை நீங்க.. சனி பரிகாரம் செய்திட ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகைலாசநாத சுவாமி ஆலயம் செல்லுங்க...
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது நவகைலாயங்களில் ஆறாவது திருக்கைலாயமான அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில் ஆகும். நவகிரகங்களில் சனி ஆட்சி பெற்ற இத்திருத்தலம் நவகைலாயத்தில் ஆறாவது திருத்தலமாகும்.
தலவரலாறு:

அகத்திய மாமுனிவரின் சீடரான உரோமச முனிவர் பிறவா வரத்துடன் சிவ முக்தி அடைய வேண்டி பொதிகை மலையில் கடுந்தவம் புரிந்தார். அவரது கடுந்தவத்தைக் கண்ட அகத்திய மாமுனிவர், சிவபெருமானை தியானித்த்து ஒன்பது மலர்க்ளை தாமிரபரணி தண்ணீரி அனுப்பினார், அம்மலர்கள் தங்கும் தாமிரபரணி தீர்த்த தலங்களில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுமாறு கூறினார், அதன்படி மலர்கள் தங்கிய இடமான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், சங்காணி, முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, இராஜபதி, சேர்ந்தமங்கலம் ஆகிய இடங்களில் சிவவழிபாடு செய்தார், பின்னர் கிரகங்களின் பாதிப்பு தோஷம் நீங்கி சிவமுக்தி அடைந்தார். அத்தாமரை மலர்களில் ஆறாம் மலர் ஒதுங்கி உரோமச முனிவரால் திருக்கோயில் எழுப்பி வழிபடப்பட்ட திருத்தலம் இத்தலமாகும். நவகைலாயங்களில் இத்திருத்தலம் சனி கிரக தோஷம் நிவர்த்தி தலமாகும்.
வரலாற்றுச் சிறப்பு
இக்கோயிலின் விமானங்களையும், மண்டபங்களையும் மதுரை சந்திரகுல பாண்டியன் கட்டினார். பெரிய மொட்டை கோபுரத்தையும் கைலாயப்பதியையும் திருமலை நாயக்கர் கட்டினார், வேள்விச்சாலை, சந்தன சபாபதி மண்டபம் கொடி மரம் அதன் கீழ் அமைந்திருக்கும் பத்தி மண்டபம் ஆகியவற்றை வீரப்ப நயக்கர் கட்டினார் என்பது வரலாற்று சிறப்பாகும்.
கல்வெட்டுச் சிறப்பு
இந்த திருக்கோயில் மகா மண்டபத்தில் திருக்கோயிலைக் கட்டிய மன்னர்கள் பற்றியும் திருக்கோயிலின் தோற்றம் பற்றியும் வட்டெழுத்தில் கூறப்பட்டுள்ளது.
தனிச் சிறப்பு
நவகிரகங்களில் சனி கிரகத்தின் ஆட்சி பெற்ற இத்திருத்தலம் நவகைலாயத்தில் ஆறாவது திருத்தலமாகும். கோயிலின் கொடிமரமானது கன்னியாகுமரி பகவதி அம்மன் திருத்தலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும். இத்திருக்கோயிலில் மரத்தினால் செய்யப்பட்ட பூதநாதர் சிலை விசேஷமானதாகும். சித்திரைத் திருவிழாவின் போது சாஸ்தாவின் அம்சமாக விழங்கும் இவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது.
பூலோக கையிலாயம்
பூலோக வைகுண்டமாகவும் பூலோக கையிலாயமாகவும் இத்திருத்தலம் திகழ்ந்ததாக இங்கு பிறந்த குமரகுருபர சுவாமிகள் வைகுந்தக் கயிலை என்று தான் பாடிய கயிலைக் கலம்பகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுயம்பு முர்த்தி
முற்காலத்தில் திருவைகுண்டம் கைலாசபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.
கோயிலில் அருள்மிகு கைலாசநாதர் சுயம்புவாக காட்சி தருகிறார். கோயில் வாசல் தெற்கு நோக்கி இருக்கிறது என்றாலும் மூலவர் கிழக்கு நோக்கியே இருக்கிறார். முன்பு தாமிரபரணி நதி கோயிலுக்கு அருகிலேயே சென்றதாகவும், காலப்போக்கில் தன்னுடைய போக்கினை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.
சனி பரிகார தலம்
இத்திருக்கோயிலில் நவக்கிரகங்கள் இருப்பினும் மூலவவருக்கு பரிகாரம் செய்வதன் மூலம் மட்டுமே ஜாதக ரீதியாக சனி தோஷம் உள்ளவர்கள் சனியின் பிடியிலிருந்து விடுபடமுடியும் என்பதால் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் எள், எண்ணெய், செவ்வரளிப் பூ ஆலை மற்றும் கருப்பு வஸ்திரம் அணிவித்து எள்ளோதரை செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால் சனியின் தாக்கம் குறையும் என்பது இத்தலத்து தனிச்சிறப்பு.
திருமண தடை நீங்கும்
இழந்த சொத்துக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளவும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தடைபடும் திருமணங்கள் நடக்கவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
இத்திருக்கோயில் திருநள்ளாறு கோயிலுக்கு ஈடானதாகும் என்று கூறப்படுகிறது. ஒரே ஊரில் நவதிருப்பதி கோயிலும் நவகைலாய கோயிலும் அமைந்திருப்பு இத்தலத்தின் சிறப்பாகும்.
சிறப்பச் சிறப்பு
இத்திருக்கோயில் நந்தவனத்திற்கு செல்லும் முன் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் உரோமச முனிவரின் சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கிழக்குப் பகுதியில் ஆரம்பத்தில் சந்தன சபாபதி கண்டபம் அமைந்திருக்கிறது. இம்மண்டபத்தில் எட்டு யாழி தூண்களும் யாழிகளின் கீழே சிங்கமும் யானையும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. யாழிகளின் வாயினுள் கைகளை விட்டுப் பார்த்தால் அங்கே உருளும் உருளைக்கற்கள் இருக்கின்றன. இது அதைச் செதுக்கிய சிற்பியின் கைத்திறனை பறை சாற்றுகிறது.
அமைவிடம்
திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் தாமிரபரணி நதிக்கு வடக்கே அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டம். திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது.
இறைவன் : அருள்மிகு கைலாசநாதர்
இறைவி :அருள்தரும் சிவகாமி அம்மன்
தீர்த்தம் : தாமிரபரணி
தலவிருட்சம்: வன்னி மரம்
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications