• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அற்புதங்கள் நிறைந்த ஆவணி மாத ராசிபலன்கள்

By Kr Subramanian
|

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.

சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். காஞ்சி காமாட்சி ஆவணி மூல தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் புனிதமானது; மோட்ச கதியை தரவல்லது. இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்கள் அவதரித்த மாதம் இந்த ஆவணி.

ஆவணி ஞாயிறு

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

விவசாயம் சிறக்கும்

தமிழகத்தில் ஆவணிமாதம் விவசாயத்திற்கு முக்கியமான காலமாகும். ஆடியில் விதைத்து, ஆவணியில் கண்போல பயிரை பாதுகாத்து வளர்கின்றனர் விவசாயிகள். கிராமப்புறங்களில் உள்ள தங்களது காவல் தெய்வத்திற்கு ஆனி, ஆடி மாதங்களில் படையல் முடித்து, கொடைவிழா நடத்தும் மக்கள், இம்மாதத்தில் தாங்கள் செய்யும் தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.

மீனாட்சி ஆட்சி

மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, புட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை... என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும்.

இத்தகைய சிறப்பு மிக்க ஆவணிமாதத்தின் 12 ராசிகளுக்கு உரிய பலனை அறிந்து கொள்வோம்

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை

செவ்வாய் - ஆவணி மாதம் 29ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்.

புதன் - ஆவணி மாதம் 6ம் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார்.

குரு - ராசி மாற்றம் இல்லை

சுக்கிரன் - ராசி மாற்றம் இல்லை

சனி - ராசி மாற்றம் இல்லை

ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டி தேர்வுகளில் வெற்றி உண்டாகும், பூர்வீக சொத்திலிருந்து வரவு உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும், சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், தாய் மாமன் உதவி உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும், குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும், விருந்தினர்கள் வீட்டுக்கு வருவார்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும், உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும், எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்திற்காக செலவுகள் உண்டாகும், தான தர்மம் செய்வீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு அமையும் யோகம் உண்டாகும், புதிய வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும், சகோதரர்களின் உதவி தேவை. புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் படிப்பு சிறப்படையும், வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், புத்தி கூர்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சுகபோகம் அதிகரிக்கும், வாகன சுகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும், தொழில் நிமித்தம் வெளியூர் செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள், ஷேர் மார்க்கெட் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும், வெளியூர் பயணம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கவனம் தேவை, நிலம் வீடு வகைகளில் வருமானம் அதிகரிக்கும். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும், குழந்தைகளுக்கு படிப்பு செலவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும், வீடு மாற்றம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் திறன் மிக்க பணியாளர்கள் அமைவார்கள், தொழில் நிலை சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் தாத்தா வழியில் பழைய பூர்வீக ஓட்டு வீடு கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எடுத்த காரியங்கள் வெற்றியடையும், சிறு தொழில் சிறப்படையும்.

கடகம்

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பா மூலம் வருமானம் அதிகரிக்கும், சாப்பாட்டு விஷயங்களில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் பேச்சில் வசீகரம் உண்டாகும், வக்கீல் தொழிலில் உள்ளவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பும் குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும், பரம்பரை விவசாய நிலம் கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும், சிறிய தூர பயணம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் திருக்கோயில் கடவுள் வழிபாடு சிறக்கும்.

சிம்மம்

சிம்மம்

ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் எல்லோர் மீதும் அதிகாரம் செலுத்துவீர்கள், அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்கள் வகையில் செலவு உண்டாகும், ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் தேவை. புதன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும், தாய்மாமன் உதவி கிடைக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனைவியால் யோகம் உண்டாகும், வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயத் தொழில் மேன்மையடையும், வீடு மராமத்து பணி செய்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப நலனில் கவனம் தேவை, குதர்க்கமான பேச்சை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு துறையில் முதலீடு செய்வீர்கள், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும், காவல் துறை ராணுவம் போன்றவற்றில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோக உயர்வு உண்டாகும். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வீர்கள், தாய் மாமனுக்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆலயத் திருப்பணிகளுக்காக செலவுகள் செய்வீர்கள், வரவு செலவுகளில் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும், சகோதரிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும், மனநிலையில் தடுமாற்றம் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் அசட்டு தைரியம் உண்டாகும், வீண் அலைச்சல் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கி் நண்பர்களுடன் கருத்து வேறுபாட்டை தவிர்க்கவும்.

துலாம்

துலாம்

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நினைப்பதெல்லாம் எளிதில் நிறைவேறும், பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் இயந்திர தொழில் லாபம் தரும், மருத்துவத் தொழில் சிறக்கும். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும், விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படிக்கலாம். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கையும், மனதைரியமும் அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் வெற்றியடையும், மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையும் தொழில் வருமானமும் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீணாக அலையாதீர்கள், தேவையற்ற செலவுகளை செய்யாதீர்கள். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலைக்கு வாய்ப்புகள் அதிகம், அதிகாரிகளின் ஆலோசனை தொழில் விருத்திக்கு உதவும். ராசிநாதன் செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் முருகப் பெருமான் திருக்கோயிலுக்கு செல்வீர்கள், பரம்பரை வீடு பங்கு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் கமிஷன் வியாபாரம் சிறப்படையும், ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அபரிமிதமாக உண்டாகும், பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் சம்பந்தப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் வியாபாரம் சிறப்படையும், குளிர்பான வியாபாரம் மேன்மை பெறும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனக் குழப்பத்தைத் தவிர்க்கவும், உடல் அசதி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மூத்த சகோதரரின் உதவி கிடைக்கும், மன எண்ணங்கள் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளின் படிப்பு மேன்மையடையும், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்து கிடைக்கும், உத்த்யோகத்தில் மேன்மை உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும், வாகனப் போக்குவரத்தில் கவனம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் ஆலயத் திருப்பணி செய்வீர்கள், தான தர்மம் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும், குடும்பத்தில் சகல சுகமும் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் உண்டாகும், விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முதலீடு அதிகரிக்கும், வெளிநாட்டு தொழில் தொடர்பு லாபத்தைத் தரும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் வெற்றி கிடைக்கும், தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும்.

மகரம்

மகரம்

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, அரசு அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டாம். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும், செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழில் எதிர்பாராத விதமாக லாபம் தரும், தகவல் தொடர்பு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும், குழந்தைகளின் செயல்களில் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும், மன குழப்பத்தை தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும், நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் எல்லை தெய்வ வழிபாடு சிறக்கும், சாப்பாடு விஷயங்களில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவி கிடைக்கும், இடமாற்றம் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவார்கள், அதிகாரப்பதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் நோய்நொடிகள் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறக்கும், புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், புத்தி கூர்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பணம் சரளமாக புழங்கும், அந்தஸ்து அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், நகைகள் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் புதிய தொழில் தொடங்குவீர்கள், செயல்கள் அனைத்தும் வெற்றிபெறும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தடைகள் தவிடுபொடியாகும், செயல்களில் வேகம் இருக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும், செல்வம் சேர்க்கும் முயற்சி வெற்றி பெறும்.

மீனம்

மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளிடம் கோபம் கொள்ளாதீர்கள், திருச்செந்தூர் செல்வது சிறப்பு. புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை, வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, குழந்தைகளின் செயல்கள் கவலையைத்தரும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கை துணையுடன் கோபம் வேண்டாம், பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும், தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்கள் வீட்டுக்கு செல்வீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சீராகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Rasi Palan for Tamil Month of Aavani from 18-08-2015 to 17-09-2015.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more