Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: கும்பம், மீனம் ராசிகளுக்கு பலன்கள்- பரிகாரங்கள்

ஐப்பசி மாதம் துலாம் மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் நவ கிரகங்களின் கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் வரிசையாக பலன்கள் எப்படி இருக்கும் என்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    18-10-2019 இன்றைய ராசி பலன் | Astrology | Rasipalan | Oneindia Tamil

    சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீசம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்றும் அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

    கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன் புதன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு தனுசு ராசியில் சனி கேது என அமர்ந்துள்ளது. ஐப்பசி ஆறாம் தேதி விருச்சிக ராசிக்கு புதன் நகர்கிறார் 14ஆம் தேதிக்கு மேல் வக்ரகதியில் செல்கிறார். 11ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஐப்பசி 18ஆம் தேதி குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 24ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் கும்பம் மற்றும் மீனம் ராசிகாரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமண முயற்சிகள் எப்படி என்று பார்க்கலாம்.

    ஐப்பசி மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலாம் ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் அதிகரித்தும் காணப்படும். இந்த ஐப்பசி மாதம் குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது, தீபாவளி, கந்த சஷ்டி, முதல் சனி பிரதோஷம் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. மகாலட்சுமி குபேர லட்சுமி பூஜை பண்றோம் ஐஸ்வர்யம் தரும் மாதம் ஐப்பசி மாதம்

    கும்பம்

    கும்பம்

    கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் மாத ஆரம்பத்தில் கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. மாத பிற்பகுதியில் தொழில் ஸ்தானம், லாப ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நன்மையும், அதிர்ஷ்டமும் நடைபெறும் மாதம் ஐப்பசி மாதம். ஐஸ்வர்யங்கள் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வெளிநாடு யோகம் கை கூடி வருகிறது. ஐந்தாம் வீட்டில் உள்ள ராகு இந்த மாதம் முதல் செயல்படத் தொடங்குவார்.

    வாகனத்தில் கவனம்

    வாகனத்தில் கவனம்

    ஐப்பசி மாதத்தில் ஐஸ்வர்யம் பெருகும் லாப ஸ்தானத்தில் குருவருவதால் நன்மைகள் அபரிமிதமாக நடக்கும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்க்கிறார் ஏழாம் வீட்டையும் குரு பார்ப்பதால் திருமணம் கை கூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஐப்பசி 25ஆம் தேதி வரை செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் வண்டி வாகனத்தில் கவனமாக இருங்க. வேகமாக போகாதீங்க. மாத இறுதியில் ஒன்பதாம் வீட்டிற்கு செவ்வாய் வரப்போகிறார். உற்சாகமடையப்போகிறீர்கள்.

    தன்னம்பிக்கை கூடும்

    தன்னம்பிக்கை கூடும்

    இதுநாள் வரை கேது உடன் சேர்ந்து செயல்படாமல் இருந்த சனிபகவான் மாத பிற்பகுதியில் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் அபரிமிதமான நன்மைகளை செய்வார். கஷ்டங்களுக்கும் கவலைகளுக்கும் விடிவுகாலம் வரப்போகுது. மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சனிப்பிரதோஷ நாளில் சிவ ஆலயம் செல்லுங்கள். குல தெய்வ கோவிலுக்கு போங்க நல்லது நடக்கும்.

    பதவி பட்டங்கள் வரும்

    பதவி பட்டங்கள் வரும்

    செய்யும் தொழிலில் வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபம் வரும். கடன்கள் கிடைக்கும். புதிய வேலைகள் கண்டிப்பாக கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வெற்றிக்கனி கைக்கு வரும். பதவியும் பட்டங்களும் தேடி வரும். இல்லத்தரசிகளின் மகிழ்ச்சி கூடும். புதிய வேலையும் புரமோசனும் நடக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியும் சுபங்களும் நடைபெறும் மாதம்.
    தீபாவளி நாளில் மகாலட்சுமி பூஜை குபேர லட்சுமி பூஜை செய்வது நல்லது மகாலட்சுமி வழிபாடு நன்மையை தரும்.

    மீனம்

    மீனம்

    மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எட்டில் சூரியன், சுக்கிரன் புதன், ஏழாம் வீட்டில் செவ்வாய் நான்கில் ராகு, ஒன்பதில் உள்ள குரு பத்தில் குரு வரப்போகிறார். இனி பயம் வேண்டாம். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு இது அதிர்ஷ்டகரமான மாதம் புதிய பதவிகள் தேடி வரும். ஆறாம் அதிபதி சூரியன் எட்டில் மறைகிறார் சுக்கிரன் உடன் இணைந்து நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். அரசு வேலைகள் கிடைக்கும்.
    வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இது ஜாக்பாட் தரும் மாதம். லாபம் அதிகம் கிடைக்கும். செய்யும் தொழிலில் நன்மைகள் அதிகம் நடக்கும்.

    தொழிலில் லாபம்

    தொழிலில் லாபம்

    கேந்திரத்தில் பாவ கிரகங்களின் சஞ்சாரம் உங்களை படுத்தி எடுக்கிறது கடன்கள் அதிகமாக இருக்கும். ஜாக்கிரதையும் விழிப்புணர்வும் தேவை.

    உங்க உடம்பையும் பத்திரமாக பார்த்துக்கங்க. இல்லத்தரசிகளுக்கு உற்சாகமான மாதம். குரு பெயர்ச்சிக்குப் பிறகு உடம்பில் புது தெம்பு வரும். குழப்பங்கள் தீரும் லாபம் அதிகம் வரும் பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கங்க. தனியாக வெளியே அனுப்பாதீங்க பத்திரமாக பார்த்துங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரும். அமைதியாக இருங்கள் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

    முருகனை வழிபடுங்கள்

    முருகனை வழிபடுங்கள்

    கஷ்டங்கள் வந்தாலும் கவலைப்படாமல் இருங்க கந்த சஷ்டியில் சூரனை சம்ஹாரம் செய்யும் முருகன் கவலைகளை போக்குவார். தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை பண்ணுங்க. நன்மைகள் அதிகம் நடக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரும். தொழிலில் அதிக லாபம் வரும். கந்த சஷ்டி நாளில் முருகனை தரிசனம் செய்து சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள் செல்வ வளம் பெருகும். ஐப்பசி அன்னாபிஷேக நாளில் சிவனை வணங்குங்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+