Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aippasi Month Rasi Palan 2020: ஐப்பசி மாத ராசி பலன் 2020 - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்

ஐப்பசி மாதம் துலாம் மாதம். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீச்சம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஐப்பசி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் செவ்வாய் மீனம் ராசியில் வக்ரமடைந்துள்ளார். ரிஷபத்தில் ராகு, சிம்மத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் வக்ர புதன், துலாம் ராசியில் சூரியன், விருச்சிக ராசியில் கேது, தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என அமைந்துள்ளது.

நவ கிரகங்களின் இடமாற்றம் இந்த மாதம் சுக்கிரன் கன்னி ராசிக்கு சென்று நீச்சமடைகிறார். வக்ரமடைந்த புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். குரு வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஆரோக்கியத்தில் அக்கறை

ஆரோக்கியத்தில் அக்கறை

மேஷம் ராசி நேயர்களே, ஐப்பசி மாதத்தில் உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியை பார்க்கிறார். அரசு தொழில், அரசு வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். சூரியனின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உங்க ராசி நாதன் செவ்வாய் ராசிக்கு 12ஆம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சகோதரர்களிடம் பேச்சு வார்த்தை பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும்.
முதலீடுகளால் லாபம்

முதலீடுகளால் லாபம்

மேஷம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். திடீர் பணவரவு இருக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். கடன் தொல்லைகள் நீங்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாக இருக்கும். ராசிக்கு ஆறாம் வீட்டில் புதன் வக்ர கதியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சுக்கிரன் நீசம் பெற்று ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் முதலீடுகள் செய்யும் முன் யோசித்து கொள்வது நல்லது. தனியார் துறையில் வேலை செய்பவர்கள் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம். தன விரையங்கள் வரலாம். செலவுகளில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்டம் நிறைந்த மாதம்

அதிர்ஷ்டம் நிறைந்த மாதம்

மேஷம் ராசிக்கு எட்டாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மீக பயணம் செல்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் திருமண யோகம், சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். லாபங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. முருகப்பெருமானை கந்த சஷ்டி கவசம் படித்து வணங்கலாம். ஐப்பசி மாதம் 3ஆம் தேதி திங்கட்கிழமை காலை 5.28 முதல் ஐப்பசி 5ஆம் தேதி புதன்கிழமை காலை 8.33 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. ஐப்பசி மாதம் 30ஆம் தேதி பகல் 1.38 மணி முதல் இரண்டு நட்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.

திடீர் அதிர்ஷ்டம் வரும்

திடீர் அதிர்ஷ்டம் வரும்

ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுடைய ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசிக்குள் ராகு, நான்காம் வீட்டில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் புதன், ஆறாம் வீட்டில் சூரியன், ஏழாம் கேது, எட்டாம் வீட்டில் குரு, ஒன்பாம் வீட்டில் சனி, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. மிகச்சிறப்பான யோகம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். பேச்சின் மூலம் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். தன வரவு இரட்டிப்பாகும். குடும்பத்தில் வம்ச விருத்தி அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் வரும். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரும் கவனம் தேவை.

இடமாற்றம் ஏற்படும்

இடமாற்றம் ஏற்படும்

அரசு பணியாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். ஆன்மீக பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். வம்பு வழக்கு பிரச்சினைகள் நீங்கும். கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். சிலருக்கு இடமாற்றம், பணிமாற்றம் ஏற்படும். செவ்வாய் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ரியல் எஸ்டேட் பிசினஸ் லாபத்தை கொடுக்கும். ஐப்பசி 5ஆம் தேதி புதன்கிழமை காலை 8.33 மணி முதல் 7ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. வீண் வம்பு வழக்குகள் தவிர்க்கவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+