ஐப்பசி மாதம் ராசி பலன்கள் 2019: சிம்மம், கன்னி ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்
ஐப்பசி மாதம் துலாம் மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் நவ கிரகங்களின் கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் வரிசையாக பலன்கள் எப்படி இருக்கும் என்
Recommended Video
சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீசம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்றும் அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன் புதன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு தனுசு ராசியில் சனி கேது என அமர்ந்துள்ளது. ஐப்பசி ஆறாம் தேதி விருச்சிக ராசிக்கு புதன் நகர்கிறார் 14ஆம் தேதிக்கு மேல் வக்ரகதியில் செல்கிறார். 11ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 18ஆம் தேதி குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 24ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சிம்மம் மற்றும் கன்னி ராசிகாரர்களுக்கு நிறைய நல்ல விசயங்கள் நடைபெற உள்ளது.
ஐப்பசி மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலாம் ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் அதிகரித்தும் காணப்படும். இந்த ஐப்பசி மாதம் குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது, தீபாவளி, கந்த சஷ்டி, முதல் சனி பிரதோஷம் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

வெளிநாடு யோகம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் அற்புதமான மாதமாக அமையப்போகிறது. ஐப்பசி மாதம் ராசி அதிபதி சூரியன் மூன்றாம் வீட்டிலும் புதன் சுக்கிரன் மாத மத்தியில் நான்காம் வீட்டிற்கும் நகர்கிறார். குருபகவான் உங்க ராசிக்கு மாத முற்பகுதியில் நான்காம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் சூரியன் சஞ்சாரமும், குருவின் சஞ்சாரமும் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. சூரியன் சஞ்சாரத்தை வைத்துதான் நாம் இந்த மாத ராசிபலனை பார்க்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் உற்சாகமாக இருக்கும். வெளிநாடு யோகமும் தேடி வரும்.

குருவினால் கஷ்டங்கள் தீரும்
கஷ்டங்கள் முடிவுக்கு வரும் காலம். இந்த மாதம் திருமண யோகங்கள் கைகூடி வரப்போகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது. காரணம் மாத மத்தியில் குரு இடப்பெயர்ச்சி அடைந்து உங்க ராசியை பார்க்கிறார். குருவின் பார்வை சேர்க்கையும் உங்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது. இதுநாள் வரை சனியோட பார்வையால் உங்களுக்கு கஷ்டங்களும் பிரச்சினைகளும் இருந்தது. இனி குரு சனியோடு சேருவதால் பாதிப்புகளும் கஷ்டங்களும் குறையும்.

கணவன் மனைவி சந்தோஷம்
தம்பதியர் இடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க நல்ல விசயங்கள் நடக்கும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். இந்த மாதம் வேலைக்காக புதிதாக எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். அதே போல அரசு வேலையில் இருப்பவர்களும் அமைதியாக இருங்கள் காரணம் சூரியன் நீச கதியில் இருக்கிறார்.

பணம் கடன் வாங்காதீங்க
யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. நீங்க புதிதாக கடன் எதுவும் வாங்கவும் வாங்கதீங்க. கண்பார்வையில் பிரச்சினைகள் வரும் கவனமாக இருங்க.
வயதானவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்க. சாப்பாட்டு விசயத்தில கவனமாக இருங்க. இந்த மாதத்தை உற்சாகமாக கடந்து விடுவீர்கள். இந்த மாதம் பெருமாளை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

அரசு வேலை கவனம்
செவ்வாய் உங்க ராசியில இருக்கிறார். ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் சுக்கிரன், புதன் இருக்கிறார்கள். மாத பிற்பகுதியில் கிரகங்கள் சுக்கிரன் புதன் மூன்றாம் வீட்டிற்கு நகர்கின்றனர். படிப்பில் அமோகமாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் தேவை. இந்த மாதம் படித்து முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் கிடைக்கும். பயிற்சி முடித்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும். தைரியமாக தேர்வு எழுதலாம்.

குழந்தை பாக்கியம்
முயற்சி ஸ்தானத்தில் குரு இருக்கிறார். செவ்வாய் உங்க ராசியில் இருக்கிறார் எனவே புதிய பாதை வெற்றியை தரும். திருமண தடைகள் நீங்கும்.
உங்களுடைய பிடிவாதங்களை தளர்த்துங்கள். குரு பெயர்ச்சியால் இந்த மாதம் உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். அர்த்தாஷ்டம சனியில் சஞ்சாரம் இனி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். குரு நான்காம் வீட்டிற்கு போய் சனி கேது உடன் அமரப்போவதால் நன்மைகள் அதிகம் நடக்கும். திருமணம் பேச்சுவார்த்தைகள் கை கூடி வரும். திருமணம் முடிந்து பிள்ளை பாக்கியத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம் கவனம்
இந்த மாதம் இருக்கிற வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் இருக்கிற வேலையிலேயே சிறப்பா இருங்க புரமோசன் கிடைக்கும். புதிய தொழில் எதுவும் இந்த மாதம் ஆரம்பிக்க வேண்டாம். வயதானவர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை. அதே நேரம் இதயநோய், நீரிழிவு நோயாளிகள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. மனதில் தைரியத்தோட இருங்க உடல் நல பிரச்சினைகள் தானாவே சரியாகும்.
காவிரியில் போய் புனிதநீராடுங்கள். முருகப்பெருமான் கோவிலுக்கு போய் கந்த சஷ்டி கவசம் படிங்க நல்லது நடக்கும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications