Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி மாத ராசி பலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்

ஐப்பசி மாதம் துலாம் மாதம் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சாரம் நவ கிரகங்களின் கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் வரிசையாக பலன்கள் எப்படி இருக்கும் என்ற

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Guru Peyarchi 2019

    சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீசம் அடைகிறார். சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்றும் அதற்கு பரிகாரங்கள் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

    கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன் புதன், மிதுனத்தில் ராகு, கன்னி ராசியில் செவ்வாய், விருச்சிகத்தில் குரு தனுசு ராசியில் சனி கேது என அமர்ந்துள்ளது. ஐப்பசி ஆறாம் தேதி விருச்சிக ராசிக்கு புதன் நகர்கிறார் 14ஆம் தேதிக்கு மேல் வக்ரகதியில் செல்கிறார். 11ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 18ஆம் தேதி குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 24ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிகாரர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு, பணவரவு எப்படி என்று பார்க்கலாம்.

    ஐப்பசி மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் காவிரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேஷ ராசியில் நீசமடையும் சனிபகவானுக்குத் துலாம் ராசி உச்ச வீடு. இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனுடைய ஆதிக்கம் குறைந்தும் சுக்கிரன், சனி இவர்களுடைய ஆதிக்கம் அதிகரித்தும் காணப்படும். இந்த ஐப்பசி மாதம் குருப்பெயர்ச்சி நிகழப்போகிறது, தீபாவளி, கந்த சஷ்டி, முதல் சனி பிரதோஷம் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    கிரகங்கள் சஞ்சாரம்

    கிரகங்கள் சஞ்சாரம்

    ஐப்பசி மாதம் பிறக்கும் போது உங்க ராசிக்குள் சூரியன், சுக்கிரன், புதன், விரைய ஸ்தானத்தில் செவ்வாய், இரண்டாம் வீட்டில் குரு, மூன்றாம் வீட்டில் கேது சனி, ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கிரகங்கள் மாத மத்தியில் இடப்பெயர்ச்சியாகி சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கும் குரு மூன்றாம் வீட்டிற்கும் நகர்கின்றனர். மாத இறுதியில் செவ்வாய் உங்க ராசிக்கு வந்து சூரியனுடன் இணைகிறார். உஷ்ண கோள்கள் ராசியில் இணைவதால் பேச்சில் கவனம் தேவை. உஷ்ணம் தொடர்பான நோய்கள் எட்டிப்பார்க்கும் என்றாலும் வேகம் குறைந்தே காணப்படும்.

    தம்பதிகள் பிரச்சினை

    தம்பதிகள் பிரச்சினை

    துலாம் ராசிக்காரங்கள் நீங்க இனிமையானவர்கள் இளமையானவர்கள் உற்சாகமானவர்கள். இந்த மாதம் மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் விழிப்புணர்வு தேவை. ஜாக்கிரதையா இல்லாட்டி பிரச்சினை வரும். கணவன் மனைவி பிரச்சினை நீடிப்பதால் பேச்சில் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க. கணவன் மனைவி சமரசம் இப்போ சரிப்பட்டு வராது பஞ்சாயத்து யாரையும் கூப்பிடாதீங்க சிக்கலை அதிகப்படுத்தி பிரிச்சி விட்டுருவாங்க.

     வண்டி வாகனத்தில் கவனம்

    வண்டி வாகனத்தில் கவனம்

    இரண்டாம் வீட்டில் உள்ள குரு பெயர்ச்சியாகி மூன்றாம் வீட்டிற்கு போனாலும் அவ்வளவா நன்மை எதுவும் ஏற்படாது. இந்த மாதம் வேலை மாற்றம் எதுவும் வேண்டாம். வேலை தேடியே ஆகணும் என்று நினைப்பவர்கள் முயற்சி பண்ணுங்க. இருக்கறதை விட்டுட்டு பறக்கிறதை ஆசைப்படாதீங்க. வண்டி வாகனம் புதுசா வாங்கதீங்க. ஆடம்பர பொருட்களை இஎம்ஐயில வாங்கதீங்க. அவசியமான பொருள் மட்டும் வாங்குங்க.

    புதிய முதலீடு வேண்டாம்

    புதிய முதலீடு வேண்டாம்

    மாணவர்களுக்கு கல்வியில் நிறைய உற்சாகம் இருக்கும். நல்லா படிப்பீங்க உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கவனமாக இருங்க.

    செய் தொழில் லாபம் வர கொஞ்சம் முதலீடு பண்ணாதீங்க. புதுசா தொழில் ஆரம்பிக்காதீங்க. வண்டி வாகனம் எல்லாம் நல்லா இருக்கான்னு செக் பண்ணிட்டு வெளியே போங்க. இந்த மாதம் ஆதித்ய ஹிருதயம் படிங்க. முருகன் கோவிலில் கந்த சஷ்டி பாராயணம் பண்ணுங்க.

    குருவால் நன்மை

    குருவால் நன்மை

    விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன் சுக்கிரன். உங்க ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் அமர்ந்து யோகத்தை தருவார். எந்த சிக்கல் வந்தாலும் குரு உங்களை பார்த்துக்குவார். எனவே இந்த மாதம் மத்தியில் குரு உங்க ராசியை விட்டு பெயர்ச்சி அடைந்து தனுசு ராசிக்கு சென்று சனி கேது உடன் இணைவது உங்களுக்கு நன்மை. எட்டில் ராகு இனி நல்லது செய்வார்.

     பிரச்சினைக்கு விடிவு காலம்

    பிரச்சினைக்கு விடிவு காலம்

    கஷ்டம் இருக்கே என்ற கவலை வேண்டாம் காரணம் இத்தனை வருடமாக கஷ்டப்பட்டுக்கொண்டேதான் இருக்கீங்க. கணவன் மனைவி பிரச்சினை நீடிக்கிறது. காரணம் இரண்டாம் வீட்டில் சனி கேது இருக்கிறது. 15 நாட்களில் குரு இடப்பெயர்ச்சியாகி சனியோடு இணைவதால் உரசல்கள் நீங்கும். உங்க பிரச்சினைக்கு விடிவுகாலம் வரப்போகிறது.

    கடன்கள் அடைபடும்

    கடன்கள் அடைபடும்

    வார மத்தியில் சுக்கிரன் உங்க ராசிக்கு வருகிறார் முகத்தில் பொலிவு கூடும். புதிய வருமானம் வரும் கடன்கள் அடைபடும். சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. நீங்க மனை வாங்கி வீடு கட்ட யோகமில்லை. கடன் அடைக்கும் காலம் வருகிறது. இரண்டு ஐந்துக்கு உடைய குரு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு போவதால் பிரச்சினைகள் நீங்கும். குரு ஐந்தாம் பார்வையாக உங்க ஆறாம் வீட்டை பார்ப்பதால் கஷ்டங்கள் குறையும். ஏழரை சனி கஷ்டத்தை கொடுத்து வந்தது. இனி கஷ்டங்கள் நீங்கும் காலம் வந்துவிட்டது.

    முருகன் துணை

    முருகன் துணை

    உங்க தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார் குரு இதனால் புதிய வேலை கிடைக்கும். அதே நேரத்தில் சனி உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருந்து

    பதினொன்றாம் வீட்டில் லாப ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாயை பார்வையிடுகிறார். உங்க உடல் நலனில் அக்கறை தேவை. பெற்றோர்கள் வீட்டில் உள்ள வயது மூத்தவர்களின் உடல் நலனில் கவனமாக இருங்க சந்திராஷ்டம நாளில் எச்சரிக்கையாக இருங்க. நல்லதே நடக்கும் கந்த சஷ்டி விரதம் இருந்து சஷ்டி கவசம் படிங்க பாதிப்புகள் குறைந்து நல்லது நடக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+