மகர ராசி குட்டீஸ்.. நீங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா.. வாங்க சொல்றோம் செல்லங்களா!
தன்னை அழித்து உலகத்திற்கு வெளிச்சம்தரும் மெமுகுவர்த்தி போல் மற்றவர்களின் சந்தோஷத்திற்காக பாடுபடும் மகர ராசி குழந்தைகளே!
சென்னை: மகர ராசியில் பிறந்த குழந்தைகள் நல்ல புத்திசாலிகளாகவும் ஒழுக்கமுடையவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் சமுகத்தில் விளங்குவார்கள்.
மகரம் ராசி மண்டலத்தில் 10வது ராசியாகும். இது ஒரு பெண் ராசி. சர ராசி. பஞ்சபூத தத்துவங்களில் இது நில ராசியாகும், அதனால் இது பூமி ராசி என்றும் அழைக்கப்படும். இதன் அதிபதி சனி. இந்த ராசியை ஆங்கிலத்தில் கேப்ரிகான் என்று அழைப்பர்.
வானமண்டலத்தில் 10வது ராசியாக மகரம் வருவதால் இதை உச்சராசி என்று அழைப்பர். மேலும் இதை பெபண் ராசி என்றும் அழைப்பர். மேலும் இதை இரட்டை ராசி என்றும் அழைப்பார்கள்.
இந்த ராசியில் உத்திராட நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் திருவோண நட்சத்திரத்தின் 1,2,3,4 பாதங்களும் அவிட்ட நட்சத்திரத்தின் 1,2 பாதங்களும் அடங்கியுள்ளன. உடலிலுள்ள எலும்புகள், முழங்கால் மூட்டுகள் இவற்றையெல்லாம் குறிக்கிறது.
இந்த ராசி சனியின் சொந்த வீடாக வருவதால் சனி பகவான் இந்த ராசியில் ஆட்சியாகவும் இந்த ராசியில் சகோதரகாரனும் பூமிகாரகனுமாகிய செவ்வாய் பகவான் உச்சமாகவும் குழந்தைக்குக் காரனுமாகிய குருபகவான் இந்த ராசியில் நீசமடைகிறார். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது எதிரியின் வீடு. ஆனால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் இது நண்பனின் வீடு.

அழகானவர்கள்
சனிபகவான் ராசியில் பிறந்த நீங்கள் ஓரளவு நல்ல அழகுடன் விளங்குவீர்கள். ஆரம்பத்தில் மிகவும் மெலிந்தும் இணைத்தும் காணப்படும். உயரமானவர்கள், உடல், மார்பில் மெல்லிய முடியிருக்கும். பெரிய தலை, அகன்ற முகம், தெளிவான கூரிய மூக்கு, சற்று வளைந்த கூனல் முதுகு. கை, கால்கள் நீண்டிருக்கும். வயது ஏற ஏற நன்கு அழகுடனும் கவர்ச்சியுடனும் வளர ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் பிறரை வசீகரிக்கக் கூடிய உருவ அமைப்பைப் பெற்று விளங்குவீர்கள்.

விடாமுயற்சி கொண்டவர்கள்
சற்று கூச்சம் சுபாவம் உடையவர்களாக இருப்பீர்கள். சற்று பயந்த சுபாவம் உடையவர்களாகவும் இருப்பீர்கள். நிலம் ராசி என்பதால் இந்த ராசியில் பிறந்த நீங்கள் பொறுமைசாலிகள். மகிழ்ச்சியுடன் வாழ நினைப்பார்கள் நம்பிக்கையானவர்கள். ஒழுக்கம் உடையவர்கள், விடாமுயற்சி, உறுதியான மனநிலை, கடின உழைப்பாளிகள், எப்பொழுதும் எதிர்கால சிந்தனை உடையவர்கள். சேவை மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பீர்கள்.

பொருளாதாரம்
இந்த ராசியில் பிறந்த நீங்கள் செலவு செய்வதையும் நன்கு யோசித்து தேவையிருந்தால் மட்டுமே செலவு செய்வீர்கள். இந்த குணத்தினால் உலகமே பொருளதார சரிவை சந்தித்தாலும் உங்களின் பொருளாதார சூழல் ஸ்டெடியாக இருக்கும். நல்ல புத்திசாலிகளாகவும் ஒழுக்கமுடையவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் சமுகத்தில் விளங்குவார்கள். ஆழமான நினைவாற்றல் உடையவர்கள். எளிமையானவர்கள். சுதந்திரமானவர்கள்.வியாபார விசயங்களில் மிகவும் நளினம் வாய்ந்தவர்கள்.

கடன்பெறுவார்கள்
தளராத விடாமுயற்சி,எடுத்துக்கொண்ட காரியத்தில் உறுதியானவர்கள். தாராள மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு சொந்தவீடு, வண்டி, வாகனங்கள் அமைய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இவர்களுக்கு கடன் கொடுக்க அநேகர் தயாராக இருப்பார்கள். மேலும் அடிக்கடி கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். அவர்கள் வீடு, நிலம், வண்டி வாகனங்கள் வாங்க கடன் வாங்குவார். ஒரு சிலர் உல்லாச பயணம் போக கடன் வாங்குவார்கள். அந்தக் கடனை அடைக்க எப்பாடுபட்டாவது சம்பாதித்து அதிலிருந்து மீள்வர்.

உழைப்பாளிகள்
சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாதலால் கௌரவம் உடையவர்களாகவோ சமுகத்தில் பெயர்,புகழ் உடையவராகவோ இருந்தாலும் இது தியாகம் செய்யும் ராசி. மற்றவர்களுக்காக உழைத்து உழைத்தே தேய்ந்து போகும் ராசியாகும். தன்னை அழித்து உலகத்திற்கு வெளிச்சம்தரும் மெமுகுவர்த்திபோல் நீங்கள் தங்களை ஒடாய் உழைத்து உருகி மற்றவர்களின் சந்தோஷத்திற்காக பாடுபடுவீர்கள்.

சில சமயம் சோம்பேறி
பல கலைகளிலும் திறமை உடைய நீங்கள், உங்களுக்கு தேவை என்று கருதும் ஒரு பொருளை எப்பாடு பட்டாவது அடைந்து விடுவீர்கள். கஷ்டப்பட்டே வாழ்வில் முன்னேறுவீர்கள். ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ஏற்படும் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள்.சனி என்றல் சோம்பேறி என்ற அர்த்தமும் உண்டு. ஒரு சிலர் எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்யமாட்டார்கள். சில நேரங்களில் சிந்திக்காது எதையாவது பேசி தன்னையும், தன்னை சுற்றி இருப்பவர்களையும் மனவருத்தப்படும்படி செய்து விடுவார்கள்.

உயர்பதவி வகிப்பார்கள்
கட்டிடக்கலைஞர்கள், பொறியியலாளர்கள், சிற்பி, வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உயர்ந்த பதவிகள் வகிப்பார்கள். குடிசைத்தொழில் செய்தாலும் சிறந்த நிர்வாகத்திறன் உடையவர்களாக இருப்பார்கள். 6 ஆம் பாவம் புதன் வீடாக வருவதால் தகவல் தொடர்பு, போக்குவரத்து வண்டி வாகனங்கள் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படும்.

திரைப்படத்துறையில் பணி
மகரம் ராசிக்கு 10வது ராசியாக சுக்கிரன் வருவதால் அரசு சார்ந்த துறைகளில் வேலைபார்க்கும் வாய்ப்புகள் அமையும். பத்தாம் இடமான வேலை மற்றும் கர்ம தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். சினிமா, இசை, கதை, கவிதை, இவற்றில் ஆர்வம் உடையவராக விளங்கச் செய்து அதில் ஈடுபட வைப்பார். மத்திம வயதுக்குப்பிறகு சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். பணமும், புகழும் சேர்ந்து எங்கு அதிகம் புழங்குகிறதோ, அங்குதான் வேலை பார்ப்பீர்கள். கணிதம், மருத்துவர்கள். பொறியாளர்களாகவும் விளங்க வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலர் ஜாதக அமைப்பைப் பொறுத்து இவ்வுலக வாழ்க்கையில் இருந்து விடுபட்டு யோகா, தியானம், போன்ற கலைகளில் ஈடுபட்டு சிறந்த ஞானி அல்லது யோகி ஆகிவிடுவார்கள்.

பாசமான குடும்பம்
குழந்தைகளாக இருந்தாலும் எதிர்காலத்தில் திருமண வாழ்க்கை எப்படி அமையுமே என்று பெற்றோர்கள் கவலைப்படுவார்கள். அந்த கவலை வேண்டாம். இவர்களது ராசிக்கு 7வது ராசி கடகம் ராசி. சந்திரனின் விடாக வருவதால் மணவாழ்வு ஓரளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.வரும் கணவன், மனைவி அழகுள்ளவர்களாகவும் இளமையானவர்களாகவும் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் நல்ல யோகமும் நன்மைகளும் உண்டு. குழந்தைகள் உண்மையாகவும் பாசத்துடனும் விளங்குவார்கள்.

தோல்நோய்கள் ஏற்படும்
10வது ராசியாக சனி வீடாக வருவதால் சனி உங்களுக்கு கால்களில் பாதிப்பு அதிகம் வரும்,தொடை, முட்டி, கணுக்கால், பாதங்கள் இவற்றில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படும். மேலும் சளித்தொல்லைகள் ஏற்படும். மேலும் சனி எலும்பைக் குறிப்பதால் எலும்பு,தோல் வியாதிகள் மற்றும் உடலில் அலர்ஜி அரிப்பு,வலிப்பு,வாயு தொல்லைகள் ஏற்படும். மேலும் உடலில் நுரையீரலில் சளித்தொல்லைகள் அஸ்த்துமா போன்ற வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. 6ம் வீடு மிதுனம் வீட்டதிபதி புதனாக வருவதால் உடலில் காது, நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்பட்டு விலகும் எனவே குட்டீஸ் எச்சரிக்கை அவசியம்.

பூவனூர் ராஜராஜேஸ்வரி
மகர ராசிக்கு வேலை ஸ்தானமாகவும், பத்தாம் இடத்திற்கு அதிபதியாகவும் துலாம் சுக்கிரன் வருகிறார். எனவே, அம்பாளை வணங்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த அம்மன் தலம் தான் பூவனூர். மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் பாமணி ஆற்றின் மேல்கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தல நாயகர் புஷ்பவனநாதர். இத்தலத்தில் ராஜராஜேஸ்வரியும், சாமுண்டீஸ்வரியும் தனித்தனி சந்நதிகளில் அருள்கின்றனர். பணிகளில் வெற்றி கிடைக்கவும், நோய் நொடிகள் தீரவும், இத்தல நாயாகி ராஜ ராஜேஸ்வரியை வணங்க வேண்டும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications