ஆஷாட நவராத்திரி : விவசாயம் செழிக்கச் செய்யும் வராஹி வழிபாடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வரபகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்கு ஏற்ற சக்தியை அளித்து விவசாயத்தை பெருக்குவதால் ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

நமது இந்தியாவின் சுதந்திர தின ஜாதகப்படி லக்னம் விவசாயத்தின் காரகனான சுக்கிரனின் ரிஷப ராசியானதாலும் நில ராசியானதாலும் விவசாயம் சார்ந்த நாடாக விளங்கிறது போலும். மேலும் சக்தி வழிபாடு என்பது நம் நாட்டிற்குறிய சிறப்பு என்பதும் குறிப்பிட தக்கது.

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

நான்கு விதமான நவராத்திரிகள் :

நான்கு விதமான நவராத்திரிகள் :

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி).(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆஷாட நவராத்திரி (24.06.2017 - 02.07.2016)

ஆஷாட நவராத்திரி (24.06.2017 - 02.07.2016)

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.

ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம். விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும், விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம்.

இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது. ஆஷாட நவராத்திரியில் அன்னையரை வணங்குவது சுக்கிரன் மற்றும் சந்திரனை மகிழ்வித்து விவசாயம் பெருகும் என்பது நிதர்சனம்.

வட மாநிலங்களில் கொண்டாட்டம்

வட மாநிலங்களில் கொண்டாட்டம்

பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

வாராஹி தேவி

வாராஹி தேவி

உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வரபகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்க்கு ஏற்ற சக்தியை அளித்து விவசாயத்தை பெருக்குவதால் ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சை பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில்

வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.

வரப்பிரசாதி வாராஹி

வரப்பிரசாதி வாராஹி

வராஹி தேவி, தேவி புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.

வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

தானியங்கள் செழிக்கும்

தானியங்கள் செழிக்கும்

வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

வளம் பெருகும்

வளம் பெருகும்

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.

விவசாயம் செழிக்கும்

நமது இந்தியாவின் சுதந்திர தின ஜாதகப்படி லக்னம் விவசாயத்தின் காரகனான சுக்கிரனின் ரிஷப ராசியானதாலும் நில ராசியானதாலும் விவசாயம் சார்ந்த நாடாக விளங்கிறது போலும். மேலும் சக்தி வழிபாடு என்பது நம் நாட்டிற்குறிய சிறப்பு என்பதும் குறிப்பிட தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ashad Navratri begins on 24th June to ends on 2nd July 2017. Navaratri is celebrated four times a year - they include the Ashad Navaratri, Ashwin Navaratri, Magh Navaratri and the Vasantha Navaratri.
Please Wait while comments are loading...