அரசியலுக்கு வருவாரா ரஜினி?.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு என்ன சொல்கிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

  சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் ஜாதகப்படி அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய காலகட்டம் இது என்று ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார்.

  நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பலரும் அரசியல் களம் சார்ந்தும் மக்கள் நலன் சார்ந்தும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஜாதகப்படி ரஜினியின் கிரக நிலைகள் எப்படி இருக்கிறது என்று ஜோதிடர் ஷெல்வி கணித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

  அவர் கூறியதாவது : ரஜினியின் ஜாதகப்படி அவருக்கு சனி திசை முடிந்து புதன் திசை தொடங்கியுள்ளது. யார் தடுத்தாலும் அவர் இந்த முறை தனியாகத் தான் அரசியலுக்கு வருவார்.

  சொந்த பணத்தில் தான் கட்சி

  சொந்த பணத்தில் தான் கட்சி

  அரசியலுக்கு வருவதில் பல விஷயங்களில் அவர் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருப்பார். கட்சியின் நிதியே அவர் தன்னுடைய சொந்த பணத்தில் தான் தொடங்குவார் என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன், அப்படித் தான் அவருடைய ஜாதக அமைப்பு இருக்கிறது. அவருடைய வியூகங்கள் படிப்படியாக தொடங்கும் என்று தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

  நிச்சயம் அரசியல் பிரவேசம்

  நிச்சயம் அரசியல் பிரவேசம்

  ரஜினி சொல்லி இருக்கும் டிசம்பர் 31ம் தேதியானது, மார்கழி மாதம் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரோஹினி நட்சத்திரத்திற்கு சிறந்த நாள்.
  அவருடைய நட்சத்திரம் திருவோணம் அது ரோஹினி நட்சத்திரம் என்பது ரிஷபத்தில் வரக்கூடிய அமைப்பு. அவர் எடுத்திருக்கும் எல்லாமே சித்தயோகத்தில் எடுத்திருக்கிறார். ஆகவே அன்றைய தினத்தில் அவர் நிச்சயம் அரசியல் பிரவேசம் பற்றி சொல்வார்.

  வெற்றிக்கொடி நாட்டுவார்

  வெற்றிக்கொடி நாட்டுவார்

  ஏற்கனவே சொன்னது போல 69 வயதிற்குள் எல்லா முடிவுகளையும் எடுத்து அதில் வெற்றிக்கொடி காட்டுவது தான் அவருடைய ஜாதக அமைப்பு. புதன் திசையில் அவர் கவனமாக இருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்தில் தான்.

  புகழ் தேடி வரும்

  புகழ் தேடி வரும்

  லக்னாபதி திசை என்பதால் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். மற்றபடி அவருடைய ஜாதகப்படி புகழ் எல்லாம் அவரைத் தேடித் தேடி வரும். அடுத்தது தமிழக மற்றும் தேசிய அரசியல் அனைத்துமே பரபரப்பாக காணக்கூடிய ஜாதகக்காரர் தான் ரஜினிகாந்த்.

  தனித்துவமாக இருப்பார்

  தனித்துவமாக இருப்பார்

  ஜாதகப்படி அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லக்கூடய காலகட்டம் இது. அரசியலுக்கு நிச்சயமாக வருவார் ஆனால் தனித்துவமாகத் தான் அவர் இருப்பார், பிற கட்சிகளை சேர்க்கக் கூட யோசிப்பார்.

  மற்றவர்க்கு பிரமிப்பாக இருக்கும்

  மற்றவர்க்கு பிரமிப்பாக இருக்கும்

  யுத்தத்தில் ஜெயிப்பது தான் அவருடைய இலக்காக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் நிச்சயம் மற்றவர்களுக்கு பிரமிப்பாகத் தான் இருக்கும். ரஜினியின் வெற்றியை இந்த காலட்டத்தில் யாராலும் தடுக்க முடியாது என்பது தான் ஜாதக ரீதியில் தெரிய வருபவை என்று ஷெல்வி கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Astrologer Shelvi says Rajinikanth will come to politics surely as per his Jathagam and rajini has to concentrate more on his health only is the issue for him shelvi says.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற