For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிம்மதியான தூக்கத்தை தரும் அசூன்ய சயன விரதம் - உங்க ஜாதகத்தில் மோட்ச ஸ்தானம் எப்படி இருக்கு?

அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள்.

Google Oneindia Tamil News

சென்னை: மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என்று தூக்கத்தை தொலைத்த பலரும் துக்கத்தோடு பாடுவார்கள். ஒருசிலர் படுத்த உடன் தூங்கி விடுவார்கள். சிலருக்கோ கட்டி இழுத்தாலும் தூக்கம் வராது போராடி தூங்குவார்கள். அந்த தூக்கம் கூட நிம்மதியானதாக இருக்காது. ஒருவரின் கர்ம வினைக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தூக்க குறைபாட்டினால் சிரமப்படுபவர்களுக்காகவே இன்றைய தினம் அசூன்ய சயன விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் இருக்க வேண்டும் என்று பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்றைய தினம் மகாவிஷ்ணு மகாலட்சுமியை வணங்கலாம். பள்ளி கொண்ட பெருமாளை தரிசனம் செய்யலாம்.

அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். பகவான் மகாவிஷ்ணு மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள் அசூன்ய சயன விரதமாக அனுஷ்டிக்க வேண்டும். அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை ஏற்படும். 30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஜோதிட ரீதியாக தூக்கப் பிரச்சினை யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.

ஜோதிடத்தில் தூக்கம்

ஜோதிடத்தில் தூக்கம்

நல்ல தூக்கம் ஒரு வரப்பிரசாதம். ஆனால் எப்படிப்பட்ட தூக்கம் என்பதை ஒருவர் ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளே தீர்மானம் செய்கின்றன. நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி! அதனால் பாதிப்படைவது மூளைதான். மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது. ஆழ்ந்த தூக்கம், அடுத்த நாள் பொழுதை சுறுசுறுப்புடன் தொடங்குவதற்கு மிக அவசியம். ஆனால் உண்மை என்னவென்றால், இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

பறி போகும் தூக்கம்

பறி போகும் தூக்கம்

ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கு இணையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் பாவம் கெட்டுவிட்டால் மனைவியும் நண்பர்களும் நமது தூக்கத்தை சூறையாடிவிடுவார்கள்.

நவ கிரகங்கள்

நவ கிரகங்கள்

தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மூளைக்கும் நரம்பிற்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்கு முக்கிய காரக கிரகமாகும். ஒருவருக்கு நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும். அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமைய சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும். ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்க்கு குறைவிருக்காது. இந்த மூன்று கிரகங்களில் ஒரு கிரகம் பலமிழந்துவிட்டாலும் அந்த ஜாதகரின் தூக்கம் சுகமானதாக அமையாது.

நல்ல தூக்கம் தரும் கிரகங்கள்

நல்ல தூக்கம் தரும் கிரகங்கள்

இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மாணிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.அடுத்ததாக தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். மன வாழ்க்கை சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.

12ஆம் வீட்டில் கிரகங்கள்

12ஆம் வீட்டில் கிரகங்கள்

தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோட்சதானம் என சிறப்பாக கூறப்படுகிறது. தூக்கத்தை பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையை கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். ஒரு ஜாதகத்தில் 12ம் பாவம் வலுவாகவே கூடாது. 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல.

ராகு,கேது,குரு

ராகு,கேது,குரு


கர்ம வினைக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையை தெரிவிக்கும் கிரகங்களாகும்.

பள்ளி கொண்ட பெருமாள் தரிசனம்

பள்ளி கொண்ட பெருமாள் தரிசனம்

தூக்கம் வராமல் தவிப்பவர்கள் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரையும், ஸ்ரீவில்லிபுத்தூரில் தல சயன பெருமாளையும் தரிசனம் செய்யலாம். அசூன்ய சயன விரதம் கடைபிடிப்பதன் மூலமாக நமக்கு நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும், தம்பதிகளிடையே அன்யோன்யமும் குடும்பத்தார் இடையே நல்ல நட்பும் உறவும் அதிகரிக்கும். அசூன்ய சயன விரத நாளில் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசிப்பது சிறப்பானது.

மகாவிஷ்ணு மகாலட்சுமி

மகாவிஷ்ணு மகாலட்சுமி

மாலை நேரத்தில் பூஜையறையில் விளக்கேற்றி கிருஷ்ணர் - ராதை அல்லது மஹாவிஷ்ணு மகாலஷ்மி இணைந்த விக்ரகம் அல்லது படத்தை ஒரு பலகையில் கோலமிட்டு வைத்து ஆவாகனம் செய்ய வேண்டும். அதனைப் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்பூஜையை தனியாகச் செய்வதைவிட, தம்பதிகளாக அமர்ந்து செய்வது உத்தமம். ரங்கநாத அஷ்டகம் கிருஷ்ணாஷ்டகம் மற்றும் பெருமாளுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். ஏலக்காய், குங்கும பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.

 தாலாட்டு பாடல்

தாலாட்டு பாடல்

புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் கிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும். தாலாட்டு பாடி பள்ளி அறையைச் சாத்திவிட்டு இரவு பகவான் சிந்தனையோடு படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலை எழுந்து, முறையாகப் புனர் பூஜை செய்து, கிருஷ்ணர், மகாலக்ஷ்மி விக்கிரஹம்படம், தட்சிணை, வெற்றிலை பாக்கு பழம் பூக்கள் வைத்து தானம் தர வேண்டும். நன்றாக தூக்கம் வருபவர்களும் இந்த விரதத்தை கடைப் பிடிக்கலாம்.

English summary
Asoonya Sayana Vratham importance. It is said in the Padma Purana that not only good sleep but also peace of mind and the possessions and possessions we have should not leave us and there should be a null fasting. Sayanam means lying in bed. Today's Asoonya Sayana Vratham is observed. Those who think they need good restful sleep can worship Mahavishnu Mahalakshmi today. Let's have a darshan with the school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X